Ticker

6/recent/ticker-posts

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

 


நாட்டில், எதிர்வரும் மே மாதம் முழுவதும் தடையின்றி எரிவாயுவை வழங்கத் தேவைாயன கையிருப்புகள் மாலைதீவின் மிதக்கும் சேமிப்புக்கிடங்கில் சேமிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், எந்தவித இடையூறுகளுமின்றி தொடர்ச்சியான விநியோகத்தை மேற்கொள்ள உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

20,000 மெட்ரிக் டொன்கள் எரிவாயுவினை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று ஏற்கனவே தென் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ளதாகவும், மே, மாதத்தின் முதல் வாரத்தில் இக்கப்பல் நாட்டை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் வாரங்களில் வரவிருக்கும் கப்பல்கள் தொடர்பான முறையான திட்டமிடலும் நடைபெற்று வருகின்றன.

இதற்கமைய ஏப்ரல் மாதத்திற்கு ஆர்டர் செய்யப்பட்ட 38,000 மெட்ரிக் டொன்களில், 7,000 மெட்ரிக் டொன் கொண்ட முதல் எரிவாயு தொகுதி மார்ச் மாத இறுதியில் நாட்டிற்கு வந்து சேர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments