உத்தரப்பிரதேசத்தில் இருந்து மனதை உருக்கும் ஒரு காதல் செய்தி வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு முந்தைய நாளே உயிரிழந்த மணமகளை, மணமகன் திருமணம் செய்து கொண்டார். அவளின் மரணம், அவள் குடும்பத்தினரையும், மணமகனையும், அவரது குடும்பத்தினரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது.
எனினும், தன்னை மணமகளாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், அவளை மணமகள் அலங்காரத்தில் அணிவித்து, நெற்றியில் சிந்தூரம் வைத்து, ஒரு திருமணத்தில் நடைபெறும் அனைத்து சடங்குகளையும் செய்து முடித்த பிறகே அவர் அவளுக்கு இறுதி விடை கொடுத்தார்.
அவள் கனவு கண்டதுபோல ஒரு திருமணத்தை அவர் நடத்தி வைத்தார். இந்த சம்பவத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, “உண்மையான காதல் இன்னும் உயிரோடு உள்ளது” என்ற கருத்துகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இது சரியானதா ?
இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன ?

0 Comments