Ticker

6/recent/ticker-posts

இப்படியொரு துயரமா 😢 உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.!



 உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.!


வவுனியா வடக்கு, மதியாமடு பகுதியில் நேற்று (18) இடம்பெற்ற கோர விபத்தில் உழவியந்திரம் கவிழ்ந்ததில் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


குறித்த நபர் தனது அத்தியாவசியத் தேவை ஒன்றின் நிமித்தம் உழவியந்திரத்தைச் செலுத்திச் சென்றுள்ளார். இதன்போது, எதிர்பாராத விதமாக உழவியந்திரம் கட்டுப்பாட்டை இழந்து திடீரெனத் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த விபத்தின்போது உழவியந்திரத்தைச் செலுத்திச் சென்ற சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 


உயிரிழந்தவர் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த புளியங்குளம் பொலிஸார், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Post a Comment

0 Comments