அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில், ஒரு தந்தை தனது ஏழு பிள்ளைகள் உட்பட எட்டு குழந்தைகளைக் கொன்றுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் வயது ஒன்று முதல் 12 வரை ஆகும். காவல்துறையுடனான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட அந்தத் துப்பாக்கிதாரி, அமெரிக்க இராணுவத்தின் முன்னாள் வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதில் 1 முதல் 14 வயதுக்குட்பட்ட எட்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர். இவர்களில் ஏழு பேர் துப்பாக்கிதாரியின் சொந்தப் பிள்ளைகள், மற்றுமொரு குழந்தை அவரது உறவினர் ஆகும்.
இந்தத் தாக்குதலில் எல்கின்ஸின் மனைவி உட்பட இரண்டு பெண்கள் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்தபோது 13 வயது சிறுவன் ஒருவன் வீட்டின் கூரையிலிருந்து குதித்து உயிர் தப்பியுள்ளார்.
அமெரிக்க இராணுவத்தின் முன்னாள் வீரரான (Army veteran) எல்கின்ஸ், சம்பவ இடத்திலிருந்து காரில் தப்ப முயன்றபோது காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
எல்கின்ஸ் மற்றும் அவரது மனைவி பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், இது தொடர்பான வாக்குவாதமே இந்த வன்முறைக்குக் காரணம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






0 Comments