"ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பிரிப்பதில் உலகளாவிய மனிதாபிமான முன்னணி நாடு சவுதி அரேபியா"
உலகின் பல பாகங்களிலும் ஒட்டிப் பிறந்தவர்கள் இருக்கிறார்கள். அது ஏக அல்லாஹ்வின் ஏற்பாட்டில் நடப்பவை. அவர்கள் பிறந்து இவ்வுலகில் வாழும் போது பல அசெளகரியங்களை அனுபவித்தக் கொண்டு வாழ்வதை நாம் பார்க்கிறோம். அவர்களது அன்றாட அடிப்படை வேலைகளைக் கூட செய்து கொள்ள பெரிதும் சிறமப்படுகின்றனர். அச்சிறமங்களைக் கண்டு அவர்களது பெற்றோர்களும் உறவினர்களும் அவர்களைப் பார்க்கின்ற பலரும் மனவேதனை அடைகின்றனர்.
அவர்களது நலன் விடயத்தில் உலகில் பலரும் அக்கறை செலுத்தினாலும் அவர்களது விடயத்தில் கருணை கொண்டு சவுதி அரேபியா ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் கையாண்டு வருவது உலகில் அனைவராலும் மிகவும் பாராட்டப்படும் ஒரு அம்சமாக இருக்கிறது. உலகில் இரட்டையர்களாகப் பிறக்கும் குழந்தைகளை அவர்களது குடும்பம் சகிதம் சவுதி அரேபியாவிற்கு விஷேட விமானங்கள் மூலம் அழைத்து வந்து அவர்களை சவுதி அரேபியாவின் அதி நவீன வைத்தியசாலைகளில் அதி விஷேட வைத்தியர்களினால் மிகத் துள்ளியமான முறையில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டு அவர்கள் பிரித்தெடுக்கப்படுகிறார்கள். இது சவுதி அரேபியாவின் வைத்திய கலாநிதி கௌரவ அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் ரபீஆ அவர்களின் தலைமையில் விஷேட வைத்திய குழாம் செய்து வருகிறது. இம்மாபெரும் மனிதாபிமானம் உலகில் வேறெங்குமில்லை என்கின்ற அளவுக்கு சவுதி அரேபியா இரட்டையர்களைப் பிரிக்கும் விடயத்தில் ஒரு மைற்கல்லாகத் திறழ்கிறது. இதனால் உலகில் அனைவரும் சவுதி அரேபியாவைப் பாராட்டுகின்றனர்.
இம்மாபெரும் மனதாபிமான செயலை வுதி அரேபியா சுமார் 31 வருடங்களாக செய்து வருவது விஷேட அம்சமாகும். மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி மையம் அப்பாரிய பொறுப்பை செய்து வருகிறது. அதன் நிறைவேற்றும் பணிப்பாளராக வைத்திய கலாநிதி கௌரவ அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் ரபீஆ நியமிக்கப்பட முன்பிருந்தே 31 வருடங்களாக இப்பாரிய பொறுப்பை அவர்கள் திறம்பட செய்து வருகிறார்கள். அவர்கள் மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி மையத்தின் நிறைவேற்றும் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகும் தொடர்ந்தும் இன்று வரை அப்பணியை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுக்கான ஒரு சர்வதேச மாநாட்டை சவுதி அரேபியா சென்ற வருடம் பிரகடனப்படுத்தியது. அதன் நிமித்தம் சென்ற வருடம் நவம்பர் 24, 25ம் திகதிகளில் ரியாத் மாநகரில் ஒரு சர்வதேச மாநாடொன்றை சவுதி அரேபியா நடாத்தியது. இப்பாரிய திட்டம் தொடங்கப்பட்டதன் 30வது ஆண்டு நிறைவையொட்டி, சர்வதேச மாநாட்டை சவுதி அரேபியா ஏற்பாடு செய்தது.
ரியாத் மாநகரில் தொடராக இரு நாட்களுக்கு நடைபெற்ற இம்மாநாட்டுக்கு உலகின் பல நாடுகளில் இருந்தும் இத்துறையில் தேர்ச்சி பெற்ற பல விற்பன்னர்கள் கலந்து சிறப்பித்தனர். இம்மாநாடு உலக மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஏனெனில் சவுதி அரேபியா இன மத பேதமின்றி ஏழை பணக்காரன் என்றில்லாமல் உலகின் பல பாகங்களில் இருந்தும் இரட்டையர்களை தனது நாட்டின் சொந்த செலவில் அழைத்து வந்து அவர்களைப் பிரித்து அவர்களுக்குத் தேவையான அனைத்து அதி நவின மருத்துவத்தையும் வழங்கி சாதனை படைத்தது மாத்திரமல்ல அதற்கானதொரு சர்வதேச மாநாட்டையும் நடாத்தியது. எனவே இம்மாநாடு உலக மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இரட்டையர்களைப் பிரிக்கும் இம்மாபெரும் பணி மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி மையத்தின் மூலம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. உண்மையில் சவுதி அரேபியா மருத்துவத் துறையில் தன்னிகரற்ற நாடாகப் பிரதிபலிக்கிறது.
மூன்று தசாப்தங்களுக்கு முன்பிருந்து ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கான சவுதி அரேபியாவின் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து சவுதி அரேபியா உலக மருத்துவத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது, இரட்டையர்களின் குடும்பத்துக்கு அனைத்து போக்குவரத்து செலவுகள், தங்குமிடம் மற்றும் மருத்துவ செலவுகளை சவுதி அரசு முழுமையாகப் பொறுப்பெடுக்கிறது.
அது மாத்திரமல்ல இரட்டையர்களைப் பிரிக்கும் இம்மாபெரும் திட்டத்தில் வெற்றி கண்ட சவுதி அரேபியா சில பிரிக்கப்பட்ட இரட்டையர்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 22 பேருக்கும் 2024ம் ஆண்டும் இன்னும் சிலருக்கும் 2025ம் ஆண்டும் இரு புனிதப் பள்ளிவாசல்களின் காவலர் மாண்புமிகு மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் அவர்களின் இலவச ஹஜ் திட்டத்தில் புனித ஹஜ்ஜுக்காக சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.
மாஷா அல்லாஹ் உலகில் எங்குமே இல்லாத சவுதி அரேபிய மன்னரின் எவ்வளவு பெரிய மனிதாபிமானம். அவ்வாறு புனித ஹஜ் கடமையை செய்ய வந்த இரட்டையர்களும் அவர்களது குடும்பமும் கண்ணீர் மல்க அல்லாஹ்விடம் இரு புனிதப் பள்ளிவாசல்களின் காவலர் மாண்புமிகு மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் அவர்களுக்கும் இலவரசர் முஹம்மத் பின் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் அவர்களுக்கும் சவுதி அரேபிய அரசுக்கும் துஆச் செய்து அவர்களது பாராட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர். இதற்காக உலக முஸ்லிம்களும் சவுதி அரேபிய மன்னருக்கும் இலவரசருக்கும் சவுதி அரசுக்கும் நன்றி தெரிவித்தனர். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக.
மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி மையம் உலகின் எல்லாப் பகுதிகளிலும் அதன் மனிதாபிமான வேலைத்திட்டங்களை சிறப்பாகச் செய்து வருவது அனைவரும் அறிந்த விடயம். மனிதகுலம் அனைவருக்கும் செழிப்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வைக்க சவுதி அரேபியாவும் மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி மையமும் பெரும் பங்களிப்புகளை செய்தி வருகின்றனர்.
சவுதி அரேபியா என்பது அதன் மறுபெயர் மனிதாபிமானம். அந்த அளவுக்கு அது உலகில் மனிதாபிமானத்தை விதைத்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக பாதிக்கப்பட்ட பலஸ்தீன் மக்களுக்கு சவுதி சவுதி அரேபிய அரசும் மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி மையமும் செய்த அளப்பரிய சேவைகள் பொண்ணெழுத்திக்களால் பதியப்பட வேண்டிய அம்சமாகும்.
சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவி மையத்தின் மூலம் இலங்கையில் பல்வேறு மனிதாபிமான செயற்காடுகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்த உண்மை.
சவுதி அரேபிய கௌரவ தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி அவர்களின் தலைமையில் இப்பாரிய திட்டங்கள் நடைபேறுகிறது.
சவுதி அரேபியாவின் அரசாங்கம் பொதுவாக மத வேறுபாடின்றி உலக நாடுகளில் மனிதாபிமான சேவைகளை வழங்கி வருகின்றது. வல்ல இறைவனுக்காகவும், மனித இனத்திற்காகவும், யாரிடமும் எந்த வெகுமதியையும், நன்றியையும் எதிர்பார்க்காமல் அதன் பணிகளை சிறப்பாகச் செய்து வருகிறது.
சவுதி அரேபியா உலகலாவிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் முதன்மையான நாடு. இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போதும் நாடுகள் பொருளாதாரத்தில் வங்குரோத்து நிலைக்கு செல்லும் போதும் அனைத்து இக்கட்டான சந்தர்ப்பங்களிலும் மனிதாபிமான உதவிகள் வழங்குதில் சவுதி அரேபியா எப்போதும் பின் நின்றதில்லை. அந்த வகையில் இலங்கையின் பொருளாதாரத்தை சீர் செய்யவும் இயற்கை அனர்த்தங்களின் போதும் குறிப்பாக சுனாமி பேரலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சவுதி அரேபியா இலங்கைக்கும் இலங்கை போன்ற வறிய நாடுகளுக்கும் எப்போதும் உதவிக் கரம் நீட்டிக் கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட அனைத்து மனிதாபிமான உதவிகளும் சவுதி அரேபிய அரசின் மூலமாகவும் அந்நாட்டின் தனவந்தர்கள் மூலமாகவும் காலாகாலம் செய்து வந்தாலும் தற்போது அவ்வனைத்து மனிதாபிமான உதவிகளையும் ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் செய்ய 'மன்னர் ஸல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்" எனும் பெயரில் 13.05.2015ம் ஆண்டு முதல் தொடங்கி முழு உலக மக்களுக்கும் மனிதாபிமான உதவிகளை 'எல்லைகள் இல்லாத மனித நேயத்தை நோக்கி" எனும் மாபெரும் கோஷத்துடன் சவுதி அரேபிய அரசு செய்து வருகிறது.
உணவுப் பாதுகாப்பு சுகாதாரம் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்ட நோய்களை குனப்படுத்தல் நீர்வசதிகள் ஏற்பாடு செய்து கொடுத்தல் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு சுகாதாரம் வீடுகள் நிர்மானித்தல் பாதுகாப்பு லொஜோஸ்டிக் சேவைகள் கல்வி உலர் உணவு விநியோகம் இயற்கை அனர்த்தங்களின் போது உதவுதல் ரமழானில் பேரித்தம் பழங்கள் விநியோகம் போன்ற இன்னோரன்ன பல மனிதாபிமான பல நிகழ்ச்சிகள் போன்றவற்றை 'மன்னர் ஸல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்" தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறது. இம்மையம் செய்யும் இம்மனிதாபிமான நிகழ்ச்சிகளுக்கு இன மதபேதமின்றி உலக மக்கள் அனைவரதும் பாராட்டைப் பெற்றுள்ளது.
அதே நேரம் மன்னர் ஸல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்" இவ்வாறான மனிதாபிமான செயல்களை இலங்கை போன்ற பின்தங்கிய நாடுகளிலும் செய்வதையிட்டு இலங்கை மக்களும் இன மதபேதமின்றி பாராட்டுகின்றனர்.
2015 முதல் 2025 வரை இந்நிவாரண மையத்தின் மூலம் 1,979,808,924 அமெரிக்க டொலர்களுக்கு மேலாக இலங்கை உட்பட உலகில் பல நாடுகளுக்கும் மனிதாபிமானத்திற்காக சவுதி அரேபியா செலவு செய்துள்ளது.
உலகில் ஒட்டிப் பிறந்த இரட்டடையர்களின் விடயத்தில் சவுதி அரேபியா உலகில் யாருமே காட்டாத அக்கறைகளை அவர்களது விடயத்தில் காட்டி அவர்களுக்கு கருணைக்கு மேல் கருணை காட்டி அவர்களையும் உலகில் சிறந்த அனைவரும் மதிக்கின்ற பிரஜைகளாக வாழ வைக்க சவுதி அரேபிய எடுத்திருக்கும் இம்மாபெரும் பணிகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். உலகில் பல தரப்பட்ட மனிதாபங்கள் இருந்தாலும் இதுவல்லவா மிகச் சிறந்த மனிதாபிமானம்.
உண்மையில் உலகில் ஒட்டிப் பிறந்த இரட்டடையர்களின் விடயத்தில் சவுதி அரேபியா ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் கையாண்டு வருவது பாராட்டாமல் இருக்க முடியாது. உலகில் அனைவராலும் மிகவும் பாராட்டப்படும் ஒரு அம்சமாகவே இருக்கிறது.
எனவே உலகில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் விடயத்தில் சவுதி அரேபியா இவ்வளவு பெரிய கரிசனை சாதனையும் படைத்துள்ளது. அவர்களும் மனிதப் பிறவி என மதித்து அவர்களையும் வாழ வைக்கவென எடுக்கின்ற இம்மாபெரும் அற்பணிப்புகளுக்காக இலங்கை மக்கள் சார்பாக இரு புனிதப் பள்ளிவாசல்களின் காவலர் மாண்புமிகு மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத், மற்றும் இலவரசர் முஹம்மத் பின் ஸல்மான் ஆல் ஸஊத் மற்றும் மன்னர் ஸல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் ரபீஆ ஆகியோருக்கும் சவுதி அரேபிய மக்களுக்கும் இலங்கை அல் ஹிக்மா நிறுவனம் நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
அன்புடன் எம்.எச்.சேஹூத்தீன் மதனி
பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம்
கொழும்பு

0 Comments