வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றின் #தலை மர்ம நபர்களால் #து*ண்டிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், 3 மாதங்களுக்கு முன்னர் அகால #மரணமடைந்திருந்தார்.
அவரது #சடலம் மரண விசாரணைகளின் பின்னர் கருப்பணிச்சான் குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த #சடலம் புதைக்கப்பட்ட இடத்தை யாரோ மர்ம நபர்கள் மீண்டும் #தோண்டி, அதிலிருந்த தலையை மட்டும் #அகற்றிச் சென்றுள்ளதாக #உயிரிழந்தவரின் பெற்றோர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

0 Comments