Ticker

6/recent/ticker-posts

வவுனியா பகுதியில் பயங்கரம்; வாடகை தகராறில் இடம்பெற்ற கொ*லை

வவுனியாவில் வீட்டு வாடகை முரண்பாட்டினால் முதியவர் ஒருவர் அடி*த்துக்கொ*லை செய்யப்பட்டுள்ளார். கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 72 வயதான முதியவர் தனது வீட்டு மலசல கூடத்திற்கு அருகில் சடலாமாக மீட்கப்பட்டிருந்தார்.

சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்த நிலையில் , அங்கு மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் , முதியவர் படுகொலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.



வாடகை பணம் தொடர்பிலான பிரச்சனை

அதனை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் முதியவருக்கு பிறிதொருவருக்கும் இடையில் வாடகை பணம் தொடர்பிலான பிரச்சனை இருந்ததாகவும் , அதனாலையே முதியவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments