அமெரிக்காவின் வொஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்க விருந்து நிகழ்வில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் ஊடக சந்திப்பை நடத்தினார்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் ஒரு "மிகவும் நோய்வாய்ப்பட்ட நபர்" என தெரிவிதார். மேலும், சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்புப் பிரிவினரால் அப்புறப்படுத்தப்பட்ட போது நிலவிய பதற்றமான சூழலை அவர் விவரித்தார்.
தாக்குதல் இடம்பெற்ற தருணத்தைப் பற்றி ட்ரம்ப் குறிப்பிடுகையில், “அவர் நரகத்தில் இருப்பது போல இன்று போராடினார், நானோ மரணத்துடன் போராடி மீண்டேன்” என உணர்ச்சிப்பொங்கத் தெரிவித்தார்.
நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் இருந்து தான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
#DonaldTrump #MelaniaTrump #ColeTomasAllen #WhiteHouse #Dinner #Washington # Shooting #SecurityThreat #Thinakaran #SriLanka #LKA #SL

0 Comments