கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பாதையில்இன்று17/04/2026: (05:15 pm)மாலை நிகழ்ந்த கோர
விப😭த்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணித்த டெம்போ டிராவலர் வேன் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரி😭ழந்தனர். 😭
Video Link 🔗👇
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னாவைச் சேர்ந்த 13 பேர், கோடை விடுமுறையைக் கழிக்க வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர். இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, இன்று மதியம் கோவை வழியாக மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
பொள்ளாச்சி - வால்பாறை மலைப்பாதையின் 13-வது கொண்டை ஊசி வளைவில் வேன் வந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அங்கிருந்த தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு, சுமார் 800 அடி ஆழமுள்ள பயங்கரமான பள்ளத்தில் வேன் தலைகுப்புற கவிழ்ந்தது.
விபத்தில சிக்கியவர்களில் ஒரு ஆண், ஒரு சிறுவன் மற்றும் 7 பெண்கள் என மொத்தம் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஓட்டுநர் முகமது பாசித் மற்றும் இரண்டு இளைஞர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 🏥
விபத்தில் டெம்போ டிராவலர் வேன் முழுவதுமாக அப்பளம் போல் நொறுங்கியது. தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் விரைந்து செயல்பட்டு உடல்களை மீட்டனர்.
காடம்பாறை போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோடை விடுமுறை சுற்றுலாவில் நேர்ந்த இந்த துயரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 😔
மலைப்பாதையில் பயணிப்போர் கவனத்திற்கு:
மலைப்பாதைகளில் வாகனங்களை இயக்கும்போது அதீத கவனம் தேவை. வளைவுகளில் வேகம் குறைத்து, பாதுகாப்பாக பயணிக்க வேண்டுகிறோம். 🙏


0 Comments