🚨 கடத்திச் சென்று நீரில் மூழ்கடித்துக் கொலை! 😱 மட்டக்குளியில் நடந்த கொடூரம் - 5 பேர் சிக்கினர்!
⭕மட்டக்குளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு 5 சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்! 🚔⚡
🔴நடந்தது என்ன?
கடந்த 22ஆம் திகதி மட்டக்குளி பகுதியில் வைத்து நபர் ஒருவர் மர்மக் கும்பலால் கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட நபர் கொடூரமான முறையில் கழுத்து நெரிக்கப்பட்டு, பின்னர் நீரில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 🌊💀
💥 STF வீசிய வலை!
ஜயவர்தனபுர முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மின்னல் வேகத்தில் செயற்பட்ட விசேட அதிரடிப்படையினர் கொழும்பு 15 மற்றும் பமுணுகம பகுதிகளில் பதுங்கியிருந்த 5 இளைஞர்களைத் தூக்கினர்! ⛓️
♦️கைதானவர்கள் விபரம்..
23 முதல் 36 வயதுடைய இளைஞர்கள்.
கொழும்பு 15 மற்றும் பமுணுகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
⚖️ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்!
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (26) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 👨⚖️🏛️
பாதாள உலகக் குழு மோதலா? அல்லது தனிப்பட்ட பகையா? என்பது குறித்து மட்டக்குளி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Mattakkuli #ColomboNews #BreakingNewsTamil #CrimeReport #SriLankaPolice #STF #lka #SriLankaNews #Justice #CrimeAlert #HotNews #BreakingSriLanka #SocialMediaViral

0 Comments