அமெரிக்காவில் சம்பவித்த கோர விபத்தில் இலங்கையை சேர்ந்த இளம் 29 வயதான ஹஷினி ஹேரத் என்ற இளம் குடும்ப பெண் உயிரிழந்துள்ளார்.
தெற்கு நோக்கிச் சென்ற லொறி ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்ட போது, ஹஷினி ஹேரத் ஓட்டி சென்ற வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளயுள்ளது. விபத்தில் ஹஷினி ஹேரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மகிழ்ச்சியான வாழ்க்கை
கடந்தாண்டு திருமணமான நிலையில், கணவனுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை முன்னெடுக்க அமெரிக்கா சென்ற நிலையில் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.
ஹஷினி, மிகவும் அன்பான மற்றும் கனிவான பெண் என அவரது நண்பர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். ஹஷினியின் பூதவுடலை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வந்து இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக, ரோசெஸ்டர் இலங்கை அமெரிக்க சங்கத்தினால் GoFundMe நிதியுதவித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

0 Comments