ஒடிசா - கியோன்ஜார் மாவட்டம் : 50 வயதான பழங்குடியின ஜீது முண்டா, தனது இறந்த சகோதரியின் கணக்கிலிருந்து ₹20,000 எடுப்பதற்காக வங்கிக்கு சென்றார்.
கணக்கு வைத்திருப்பவர் நேரில் வந்தால்தால் பணம் எடுக்க முடியும் என வங்கி அதிகாரிகள் பிடிவாதம் காட்டியதால்,
மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்த சகோதரியின் உடலை தோண்டி எடுத்து எலும்புக் கூட்டைச் சுமந்துகொண்டு 3 கி.மீ. தூரம் நடந்து கொண்டு வங்கிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இறப்புச் சான்றிதழ் விதிகள் பற்றி அறியாத ஜீது முண்டா, இந்த அவசர முடிவை எடுத்தார். அவருக்கு உடனடியாகப் பணத்தை விடுவிக்க வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

0 Comments