ஏப்ரல் 12 முதல் நேற்று (16) வரையிலான நான்கு நாட்களில் துரதிர்ஷ்டவசமாக 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
நீந்த முடியாத, பாதுகாப்ற்ற இடங்கள், மதுபோதையில் நீராடச் செல்வதுமே இந்த விபத்துகளுக்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
குளிப்பதற்கு முன், அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
உயிர் காப்பாளர்கள் இருக்கும் இடங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
மேலும், அனைவரும் எச்சரிக்கைகளுக்குக் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

0 Comments