Ticker

6/recent/ticker-posts

கொழும்பில், தனது முன்னாள் காதலியை கத்தியால் தாக்கி கொ*லை செய்து, அவரது புதிய காதலரையும் படுகாயப்படுத்திய சீன இளைஞன் 14 நாட்களின்பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


கொழும்பில், தனது முன்னாள் காதலியை கத்தியால் குத்திக் கொலை செய்து,  அவரது புதிய காதலரையும் படுகாயப்படுத்திய சீன இளைஞன் 14 நாட்களின்பின் கைது செய்யப்பட்டுள்ளார்.


26 வயதுடைய நபர், கொழும்பு தர்மபால மாவத்தையில் ஒளிந்திருந்தபோது, குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.


உயிரிழந்தவர் மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த 29 வயதுடைய லியு யி ஹான் என்ற சீன மாணவியாகும். இந்த மாணவி கொழும்பு துறைமுக நகரத்தில் பணியாற்றும் மற்றொரு சீன இளைஞருடன் பழகி வந்துள்ளார்.


களுபோவில பீரிஸ் குடியிருப்பில் இருந்த தனது பொருட்களை எடுத்துச் செல்ல மாணவி தனது புதிய காதலருடன் வந்த போது முன்னாள் காதலன், ஆயுதத்தால் மாணவியைக் குத்திக் கொலை செய்ததோடு, அதனைத் தடுக்க வந்த புதிய காதலரையும் படுகாயப்படுத்திவிட்டுத் தப்பியோடியுள்ளார்.


இந்தத் தாக்குதலில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றைய சீன இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments