Ticker

6/recent/ticker-posts

கருணை கொ*க்கு அனுமதி உச்ச நீதிமன்றமே கண்ணீர் சிந்திய தீர்ப்பு


13 ஆண்டுகளாக சுயநினைவின்றி போராடி வரும் 31 வயது இளையரான ஹரீஷ் ராணா என்பவரைக் கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரீஷ், பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் படித்துவந்தார். 2013ஆம் ஆண்டு அந்த விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். மூளையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சுயநினைவின்றி ‘கோமா’ நிலைக்குச் சென்றார்.

சுவாசிப்பதற்காக ஒரு குழாய், உடலுக்குள் உணவு செலுத்த மற்றொரு குழாய் என்ற மருத்துவக்கருவிகள் மட்டுமே ஹரீஷின் உடலில் உயிர்தங்க உதவின. இல்லையெனில் அவரை ஒரு தாவரம் என்று குறிப்பிட்டுவிடலாம். தங்கள் மகனுக்குப் பொருத்தப்பட்டுள்ள உயிர் காக்கும் கருவிகளை அகற்ற அனுமதி கோரி அவரது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்தவரை ஒரு விபத்து தாவரத்தைப் போல் வாழ வைத்துவிட்டது. 13 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவ அறிக்கை குறிப்பிடுகிறது என்றும் தெரிவித் கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கினர்.

Post a Comment

0 Comments