Karnataka Dist- கலபுரகி மாவட்டத்தில், கணவன் ஒருவன் தனது மனைவியை மக்கள் முன்னிலையிலேயே மிகக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த அக்ஷய் மற்றும் ஷைலா தம்பதியினருக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கங்காபூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு வயல் அருகே காரை நிறுத்திய அக்ஷய், தனது மனைவியைப் பலவந்தமாக வெளியே இழுத்து அரிவாளால் கழுத்தை அறுத்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய ஷைலா தப்பிக்க முயன்றபோது, அக்ஷய் தனது காரை அவர் மீது ஏற்றி நசுக்கிக் கொன்றார். இந்த கொடூரத்தை அங்கிருந்தவர்கள் தடுத்த நிறுத்தாமல் வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கலபுரகி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முறையற்ற உறவு இருந்ததாக எழுந்த சந்தேகத்தின் பெயரிலேயே அக்ஷய் தனது மனைவியைத் திட்டமிட்டுப் படுகொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது தலைமறைவாக இருந்த கணவன் அக்ஷய் மற்றும் அவனது பெற்றோரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொதுவெளியில் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று, கழுத்தை அறுத்துக் காரால் நசுக்கிக் கொன்ற இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments