Ticker

6/recent/ticker-posts

தோப்பூரை சோகத்தில் ஆழ்த்திய விபத்து இளைஞன் பலி


திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் பகுதில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தத்துடன் மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.





இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் #தோப்பூர் -06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜௌசீர் அமான் வயது (18)என தெரியவருகிறது.

மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர்.இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது .


உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா தற்போது #தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நீதிவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments