யாழில் உயர் கல்விச் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தில் ஒரு கொலை நடைபெற்றுள்ளது. திலீபன் தயாளினி என்ற 53 வயதான யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் மகளின் கணவரான தினகர் திவாகர் என்பவனால் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலைச் சம்பவத்தில் மகளுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தயாளினியைக் கொலை செய்த திவாகர்

திவாகர் தினகரன் யாழ் அரியாலை நாயன்மார்கட்டுப் பகுதியில் ராஜேஸ்வரி வீதியில் வசித்து வந்தவன். திவாகரின் தந்தை தினகரன் 42 வயதில் அண்மையிலேயே மாரடைப்பில் உயிரிழந்துள்ளார். திவாகரின் தாய் ஏற்கனவே திருமணமாகிய இரு பிள்ளைகளின் தாய் என தெரியவருகின்றது. திருமணம் முடித்து இரு பிள்ளைகளின் தாயையே திவாகரின் தந்தை மறுதிருமணம் முடித்து அவருக்கு பிறந்தவனே திவாகர். திவாகரின் தந்தையின் பெற்றோர் மற்றும் சகோதரர் வன்னி இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். திவாகரின் இன்னொரு சித்தப்பா அண்மையில் அரியாலையில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திவாகர் அப்பகுதியில் அமைதியான போக்குள்ளவன் எனவும் நண்பர்கள் வட்டம் குறைந்தவன் எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தொிவித்துள்ளார்கள். திவாகரின் தாயார் பாசையூர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் யூஸ் தயாரித்து விற்பனை செய்து வந்தவர் எனவும் தெரியவருகின்றது.
தயாளினியின் மகளும் திவாகரும்.

சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினியின் தாய் தந்தையர் கௌரவமாக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தயாளினி பல்கலைக்கழகத்தில் சித்தமருத்துவத்துறையில் கற்கும் போது தன்னிலும் விட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அதே துறையில் கற்கும் மாணவன் திலீபன் மீது காதல் ஏற்பட்டு அதன் காரணமாக தயாளினி தமது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக திலீபனை கரம்பிடித்துள்ளார். திலீபன் மூலமாக தயாளிக்கு 2 குழந்தைகள் பிறந்துள்ளன. அந்தக் குழந்தைகளில் கடைசிப் பிள்ளையே தயாளினியின் கொலைக்கு காரணமான மகள்.
தயாளினியும் மகளும்…



தயாளினி திருமணமான பின்னரும் தயாளினியின் பெற்றோர் தயாளினியை திலீபனிடமிருந்து பிரிப்பதற்கு கடும் முயற்சி எடுத்து வெற்றி பெற்றுள்ளார்கள் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். தயாளினி தனது இரு பிள்ளைகளும் குழந்தைகளாக இருக்கும் போதே விவாகரத்துப் பெற்று பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
தயாளினி விவாகரத்துப் பெற்ற பின் தயாளினியின் கணவர் திலீமன் மறுமணம் செய்து அவருக்கு அந்தத் திருமணம் மூலம் பிள்ளைகளும் உள்ளது. தற்போது திலீபன் காலமாகிவிட்டார்.
வேம்படி மகளீர் கல்லுாரியில் கல்வி கற்றுவந்த மகள் எவ்வாறு திவாகரின் வலைக்குள் வீழ்ந்தாள் என அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் திவாகரின் உறவுகளில் ஒன்று தயாளினியின் வீட்டில் வேலை செய்வதற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளதாக அறிய முடிகின்றது. மகள் வேம்படியில் கற்று வந்தாலும் எவருடனும் நெருக்கமாக பழகுவதில்லை என தெரியவருகின்றது. தாய் மகளை காரில் பாடசாலைக்கு ஏற்றி இறக்குவது வழமை. அவ்வாறு ஏற்றி இறக்குவதில் சில நாட்கள் சிக்கல் வந்தால் அப்பகுதியில் நிற்கும் வயதான ஐயா ஒருவரின் ஆட்டோவிலேயே மகளை ஏற்றி இறக்குவாராம்.
ஆட்டோவில் மகளை ஏற்றி நான் செல்லும் போதுகூட தன்னுடன் அந்த பிள்ளை ஒரு வார்த்தை கதைப்பதில்லை என ஆட்டோவில் ஏற்றி இறக்கிய முதியவர் கூறினார். வீட்டில் இறக்கியவுடன் நன்றி கூடச் சொல்லாது ஒரே ஓட்டமாக ஓடும் பழக்கம் அந்தப் பிள்ளையிடம் இருந்தது என கூறினார் அந்த முதியவர்.
சுண்டிக்குளி கனக்கர் சந்திக்கு அருகாமையில் உள்ள ஒழுங்கையில் சொந்தமாக வீட்டிலேயே தயாளினி வாழ்ந்து வந்துள்ளார். அப்பகுதியில் உள்ளவர்கள் பலரும் வாடகைக் குடியிருப்பாளர்கள். அவர்களுடன் தயாளினி பெரும்பாலும் நட்புடன் பழகுவது குறைவு என அயலவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் நேரில் தங்களை கண்டால் சிரித்துவிட்டு தயாளினி செல்வாராம்.
தயாளினியின் மகளுக்கு திருமணமான விடயம் அங்குள்ள பலருக்கு தயாளினி இறந்த பின்னரே தெரிந்துள்ளது.
தயாளினியின் மகள் திவாகருடன் வாழ்ந்து வந்த போது திவாகர் ஏற்கனவே போதைப்பொருளுக்கு அடிமையானவன் என்பதை அறித்து அவனது தொல்லைகள் தாங்காமல் மீண்டும் தாயாருடன் வாழ்ந்து வந்துள்ளாள். அந் நேரத்தில் அங்கு சென்று திவாகர் பல தடவைகள் பிரச்சனைப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. நள்ளிரவு வேளையில் தயாளினியின் வீட்டுக்கு வந்த திவாகர் வெடிகள் வெடித்து அச்சுறுத்தியதாகவும் அதன் காரணமாக தயாளினி பொலிசாருக்கு முறையிட்டு பொலிசார் திவாகரைத் தேடித்திரிந்து வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
பொலிசார் அவ்விடத்திலிருந்து சென்றவுடன் மீண்டும் அங்கு வந்து திவாகர் பலதடவைகள் சண்டித்தனம் புரிந்து வந்துள்ளான்.
இவ்வாறான நிலையிலேயே தயாளினியும் மகளும் கடத்தப்பட்டு தயாளினி திவாகரால் கொலை செய்யப்பட்டுள்ளார். தயாளினியின் கொலையில் பெரும் மர்மம் இருக்கின்றது. பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை தீவிரப்படுத்துதல் வேண்டும். மகளுடன் சேர்ந்தே தயாளினி கொல்லப்பட்டுள்ளார். மகளை அழைத்துச் செல்ல முற்பட்ட போது தயாளினி தடுத்திருக்கலாம் என்றும் அவ்வேளையில் திவாகரனின் தாக்குதலுக்கு உள்ளான தயாளினி இறந்திருக்கலாம் எனவும்
சந்தேகிக்கப்படுகின்றது. திவாகரை பிரிந்து வாழ்ந்த தயாளினியின் மகள் அதன் பின்னர் எவ்வாறு திவாகருடன் திருகோணமலைக்குச் சென்றிருக்கலாம்? தாயாரின் சடலத்தை சாவகச்சேரி தனங்களப்பு காட்டில் எவ்வாறு எறிந்திருக்கலாம் என்பதெல்லாம் பெரும் சந்தேகத்தை உண்டாக்கும் கேள்விகளாகும்.
பொலிசாரின் விசாரணைகள் என்ன சொல்லப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…..
பெற்றோரே உங்களது பிள்ளைகளை மிகவும் அக்கறையாக வளர்த்துக் கொள்ளுங்கள். அல்லாதுவிடில் இவ்வாறன சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறலாம்…
தயாளினி 18ம் திகதி காணாமல் போனமை தொடர்பாக யாழ் பல்கலைக்கழகம் பொலிஸ் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதம்

கண்காட்சி ஒன்றில் தயாளினியின் அருமையான விளக்கம் ஒன்று

0 Comments