ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி பதவியேற்ற பிறகு, அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றவுள்ள முதல் உரை இன்னும் சில நிமிடங்களில் ஈரானிய அரசு தொலைக்காட்சியில் (IRIB) ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் தற்போது "நல்ல ஆரோக்கியத்துடன்" இருப்பதாகவும், போரை வழிநடத்தி வருவதாகவும் ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த உரையில், "இரத்தத்திற்கு இரத்தம்" என்ற அடிப்படையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான ஈரானின் அடுத்தகட்டப் போர் நடவடிக்கைகள், அணுசக்தி ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறியதற்கான காரணங்கள் மற்றும் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் மீதான தாக்குதல்கள் குறித்து அவர் மிக முக்கியமான ஏழு அம்சங்களை விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, தனது தந்தை மற்றும் குடும்பத்தினரின் மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கில் அவர் விடுக்கப்போகும் எச்சரிக்கை உலக நாடுகளைப் பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

0 Comments