Ticker

6/recent/ticker-posts

Photo & Video யாழில் தாயையும் மகளையும் பலியெடுத்த விபத்து


யாழ்.சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடி பகுதியில் இடம்பெற்ற வாகன வி*பத்தில் தாயும் மகளும் உயி*ரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று(21) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விப*த்துக்குள்ளாகின.




இதன்போது முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்துள்ளனர்.


அவர்களுள் தாயும் மகளும் சம்பவ இடத்தில் உயி*ரிழந்துள்ளதோடு சாரதியும், பிறிதொரு பெண்ணும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையீல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments