கொக்கட்டிச்சோலை பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றி கணவனால் தீ வைக்கப்பட்டதாக கூறப்படும் மனைவி இரண்டு மாதங்களின் பின்னர் நேற்று (24) உயிரிழந்தார்.
கடந்த ஜனவரி 17ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், காயமடைந்த குறித்தப் பெண் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார்.
அவர் 10 நாட்கள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், வீடு திரும்பியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்தப் பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் ஏப்ரல் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த பாதிக்கப்பட்டிருந்த குறித்த பெண், இரண்டு மாதங்களின் பின்னர் நேற்று உயிரிழந்தார்.
அவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-சரவணன்

0 Comments