திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உருமன்குளம் பெட்டைகுளம் பகுதியில் சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் கார் தீயில் உயிரோடு எரிந்து உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தமிழக மக்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கார் தீயில் எரிந்த நான்கு உயிர்கள்..
(1) முகமது ரஃபீக் (45)
(2) சையது நஸ்ரின் பாத்திமா (36)
(3) 15 வயது மகள்,
காருக்குள் தீயில் கருகிய ரபியின் குடும்பத்தினர் கடன் சுமையை அடைக்க முடியாமல் திணறி வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்த தங்கள் வீட்டை விற்ற பிறகு, அவர்கள் பெரும்பாலும் அந்தக் காருக்குள்ளேயே வசித்து வந்தனர்.
இச்சம்பவம் நிகழ்வதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர்கள் தங்கள் உடைகள் மற்றும் பைகள் உள்ளிட்ட உடைமைகளை 'அத்தங்கரை தர்ஹா' அங்கிருந்தவர்களுக்கு தானமாக வழங்கியதாகவும் தகவல்
இச்சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் கொலைக்கான சாத்தியக்கூறுகள் ஏதும் இல்லை என்றும் ஒரு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இது தொடர்பான செய்திகள் அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்த புகைப்படங்கள் .
அவர்களது குடும்ப புகைப்படங்கள் தமிழக மக்களிடையே வைரலாக பரவி வருகிறது.



0 Comments