Ticker

6/recent/ticker-posts

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் நட்பு நாடுகளுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு லீற்றர் எண்ணெயைக் கூட கொண்டு செல்ல முடியாது – ஈரான் எச்சரிக்கை


 ஈரான் தமது தாக்குதல் கொள்கையில் புதிய வியூகத்தை வகுத்துள்ளதாக தெஹ்ரானின் காதம் அல்-அன்பியா இராணுவ தலைமையகத்தின் ஊடகப்பேச்சாளர் இப்ராஹிம் சோல்பகாரி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய பரஸ்பர தாக்குதல் கொள்கை முடிவுக்கு வந்துவிட்டது என்றும், இனிமேல் தாக்குதலுக்குத் தாக்குதல் என்ற புதிய கொள்கையைப் ஈரான் பின்பற்றப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு லீற்றர் எண்ணெயைக் கூட கொண்டு செல்ல ஈரான் அனுமதிக்காது.

அவர்களை நோக்கிச் செல்லும் எந்தவொரு கப்பலும் அல்லது தாங்கியும் ஈரானின் இலக்காக அமையும்.

எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 200 அமெரிக்க டொலர் வரை உயர்வதற்குத் தயாராக இருங்கள்.

ஏனெனில் எண்ணெய் விலை பிராந்திய பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது.

அந்தப் பாதுகாப்பை நீங்கள்தான் சீர்குலைத்துள்ளீர்கள் என அவர் எச்சரித்துள்ளார்.

Post a Comment

0 Comments