ஈரானின் IRGC அமைப்பைச் சார்ந்த நான்கு உயரதிகாரிகள் லெபனானில் ஒரு விடுதியில் பதினைந்து அறைகளை வெவ்வேறு போலிப் பெயர்களில் பதிவு செய்து அதில் ஒரு அறையில் மட்டும் நால்வரும் தங்கியிருந்திருக்கிறார்கள்.. அவர்களது பாதுகாப்பிற்காக அந்த விடுதியின் கண்காணிப்புக் கேமிராக்கள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.
நேற்று அந்த நால்வர் தங்கியிருந்த அறையைத் தாக்கிய ஒரு இஸ்ரேலிய ஏவுகணை அனைவரையும் கொன்றிருக்கிறது..
அவர்கள் சரியாக அந்த அறையில்தான் தங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் எப்படி எதிர்முகாமிற்குச் சென்றது என்பது தெரியவில்லை..
இந்த உளவுத் தொழில்நுட்பத்தின் வலையை மட்டும் பிடித்துவிட்டால் ஈரான் இப்போரில் வென்றுவிடலாம்..
ஆனால் அது அவ்வளவு எளிதல்ல..

0 Comments