Ticker

6/recent/ticker-posts

கோர விபத்தில் சிக்கி 7 வயது சிறுவன் பலி!

 


தணமல்வில – வெல்லவாய வீதியில் குடாஓய நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

வெல்லவாயவில் இருந்து தணமல்வில நோக்கி பயணித்த லொறி ஒன்று, எதிர்த்திசையில் வந்த மூச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த சிறுவன் பலத்த காயமடைந்து தணமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

கொட்டியாகல பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், குடாஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments