ஒரு வீட்டின் பின்னால் புதைக்கப்பட்டிருந்த ஒரு குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பல்லகெட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை, பல்லகெட்டுவ, கலபிடகந்த பகுதியில் உள்ள வீடொன்றின் பின்னால் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலின் பேரில், வீட்டின் பின்னால் புதைக்கப்பட்டிருந்த ஒரு குழந்தையின் சடலத்தை பல்லகெட்டுவ பொலிஸ் அதிகாரிகள் குழு மீட்டனர்.
சம்பவம் தொடர்பாக கலபிடகந்த பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய தாயார் கைது செய்யப்பட்டார். அவர், நான்கு குழந்தைகளின் தாயாவார். அவரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 Comments