சுப்ரிம் லீடர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியதை அடுத்து ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) விரைவில் “பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல்” தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் Fars செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
“ஈரானின் இஸ்லாமியக் குடியரசு வரலாற்றிலேயே மிகப் பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல் நடவடிக்கை தொடங்கப்படுகிறது” என்று IRGC தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் “சில நிமிடங்களுக்குள்” ஆரம்பமாகும் என்றும், அது பிராந்தியத்தில் உள்ள “ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அமெரிக்க பயங்கரவாத தளங்களை” குறிவைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது

0 Comments