திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திருகோணமலையைச் சேர்ந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ உள்ளிட்ட நான்கு பிக்குகளும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் சமர்ப்பித்த பிணை விண்ணப்பம் இன்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேக நபர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த 19 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லாஹ் இன்று பிணை உத்தரவை வழங்கினார்.

0 Comments