Ticker

6/recent/ticker-posts

55 ஆண்டுகளில் 89 சிறார்களை வன்புணர்ந்த ஆசிரியர்


இந்தியா உட்பட 10 நாடுகளில், 55 ஆண்டுகளில், சுமார் 89 சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் ஒருவர் குறித்த தற்போது பொலிஸாருக்கு தகவல் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்சின் நியூ காலிடோனியாவில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஜாக் லெவ்யூக்ளே, 79 வயதான இவர், 55 ஆண்டுகளுக்கு மேலாக, தன்னிடம் படிக்க வந்த சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்தது தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த 1967 முதல் 2022 வரை அவர் இத்தகைய கொடுமையை அரங்கேற்றியுள்ளார்.

இது தொடர்பாக 'பென்டிரைவ்'வில், ஜாக் எழுதி வைத்திருந்த ஆவணங்கள் அவரது உறவினர் ஒருவர் கண்டெடுத்துள்ளார்.

இதன் வாயிலாக 89 பாதிக்கப்பட்ட சிறார்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அவர், பிரான்ஸ் மட்டுமின்றி, இந்தியா, ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் பாலியல் லீலைகளை நிகழ்த்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments