Ticker

6/recent/ticker-posts

17 வயது மாணவனின் உயிரைப் பறித்த விபத்து.!


 தவலம - உடுகம வீதியில் தவலம சந்திக்கு அருகில் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலங்கல்ல, மல்கல்ல பகுதியைச் சேர்ந்த கசுன் கல்ஹார என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் மற்றும் காரை செலுத்திய வைத்தியரும் காயமடைந்த நிலையில் உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments