Ticker

6/recent/ticker-posts

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு ஆயுள் தண்டனை




நிலத் தகராறில் இரண்டு சகோதரர்களை கொலை செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சஹாரன்பூர் உள்ளூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (24) அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், குற்றவாளிகளுக்கு மொத்தமாக ரூ.10.73 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி, சுமார் 20 பீகா (தோராயமாக 12.5 முதல் 20 ஏக்கர்) நிலத்தைச் சுற்றிய தகராறு காரணமாக யாசின் மற்றும் அவரது சகோதரர் தாசின் என்பவர்கள் மர்ம கும்பலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட 13 பேரையும் கைது செய்தனர். பின்னர் ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, 13 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததுடன் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Post a Comment

0 Comments