Ticker

6/recent/ticker-posts

முல்லைத்தீவில் பரபரப்பு; தலையில் அடிகாயங்களுடன் சடலம்; கொலையா?



முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் தலையில் அடிகாயங்களுடன் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கரடிப்புலவு பகுதியை சேர்ந்த 41 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட சடலத்துடன் அவரது துவிச்சக்கர வண்டியும் காணப்பட்டது. அதன் அடிப்படையில் , குறித்த நபர் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை எவரேனும் பின் புறமாக தலையில் பலமாக தாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.



சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments