Ticker

6/recent/ticker-posts

வீட்டைத் திருத்தும்போது அதிர்ச்சி – கூரைக்குள் தோட்டாக்கள் – அம்பாறையில் சம்பவம்

 


வீட்டைப் பழுதுபார்க்கும் போது ஓடுகளுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்ட 118 தோட்டாக்கள் மீட்கப்பட்டு பாணமை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன

அம்பாறை மாவட்டம் பாணமை பொலிஸ் பிரிவுக கு உட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றை பழுது பார்க்கும் போது ஓடுகளின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 தோட்டாக்களே (5.56x 45mm) பாணமை பொலிஸில் இன்று (10)  ஒப்படைக்கப்பட்டன.

வீட்டின் உரிமையாளர் தற்போது கொழும்பில் வசிப்பதோடு  தனது சகோதரரிடம் குறித்த வீட்டைப் பழுதுபார்க்கும் பணியை ஒப்படைத்திருந்தார்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல  அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டாரவின்  மேற்பார்வையில்  உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்தநாராயண
பாணமை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகளை  அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

-அம்பாறை நிருபர் பாறுக் ஷிஹான்

Post a Comment

0 Comments