இஸ்ரேலுக்கு 6.67 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுத விற்பனைக்கும், சவுதி அரேபியாவிற்கு 9 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுத விற்பனைக்கும் ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதிகரித்து வரும் பிராந்திய பதற்றங்கள் மற்றும் ட்ரம்பின் தொடர்ச்சியான காஸா போர் நிறுத்த முயற்சிகளுக்கு மத்தியில் இந்த ஒப்பந்தங்கள் இடம்பெற்றுள்ளன.
இஸ்ரேலுக்கான ஆயுத தொகுப்பில் 3.8 பில்லியன் டொலர் மதிப்புள்ள 30 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகொப்டர்களும் உள்ளடங்குகின்றன.
மேலும், 1.98 பில்லியன் டொலர் மதிப்புள்ள 3,250 இலகுரக தந்திரோபாய வாகனங்கள், 150 மில்லியன் டொலர் இலகுரக பயன்பாட்டு ஹெலிகொப்டர்களும் உள்ளடங்குகின்றன.
இதற்கிடையில், சவுதி அரேபியா 730 பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் பிற உபகரணங்களைப் பெறவுள்ளது.
இது பிராந்திய பாதுகாப்பை அதிகரிக்கும் என்றும், நேட்டோ அல்லாத ஒரு முக்கிய நட்பு நாடு வளைகுடா பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைப் பராமரிக்க உதவும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

0 Comments