அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் Dialog மற்றும் Airtel தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக, நானும் நண்பர் U.L. அன்சாரும் இணைந்து முறைப்பாடு✍️ ஒன்றை பதிவு செய்துள்ளோம்.
தங்கள் தொலைத்தொடர்பு வசதிகளை வழங்கும் பொருட்டு முற்பணத்தைப்💰 பெற்றுக் கொண்ட பின்னர், கடந்த 27ஆம் திகதியில் இருந்து இன்றுவரை, எந்தவித முன்னறிவித்தலுமின்றி தங்களுடைய தொலைத் தொடர்பு வசதிகளை வழங்காமல் இவர்கள் ஏமாற்றியுள்ளனர்.😢
மேலும் தொலைத்தொடர்பு வசதிகளை வழங்காத நாட்களுக்கும் சேர்த்து, பணத்தை அறவிட்டு இந்த நிறுவனங்கள் மோசடி செய்துள்ளன🙄.
அதேவேளை முன்னறிவித்தலின்றி இவர்கள் தொலைத்தொடர்பு📲 வசதிகளை இடைநிறுத்தியமையினால், எமது தொழில் நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன.🥺
மேலும் நாட்டில் பேரிடர் ஏற்பட்ட காலப்பகுதியில், இவர்கள் இவ்வாறு முன்னறிவித்தலின்றி தொலைத்தொடர்பு வசதிகளை முடக்கியமையினால், எமது குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களின் நலன்கள் பற்றி அறிய முடியாத நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளானோம்.😪
எனவே, இந்த இரண்டு நிறுவனங்களின் ஏமாற்று மற்றும் மோசடி வேலைகளுக்கு எதிராக – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, எங்கள் முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.
இது தனிப்பட்ட முறைப்பாடு அல்ல; பாதிக்கப்பட்ட அனைத்து மக்களினதும் சார்பானது👊.
ஊடகவியலாளர் UL மப்ரூக்

0 Comments