Ticker

6/recent/ticker-posts

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

 


ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 

ரிக்டர் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

 

ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், ஹொக்கைடோ ,அமோரி மற்றும் இவாட்  ஆகிய மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

நிலநடுக்கத்தின் மையம் அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலும், 50 கிலோமீற்றர் ஆழத்திலும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மூன்று மீற்றர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எழக்கூடும் என ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments