2025, தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகள் மாற்றமடைந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதிபர்கள், அவற்றை நிகழ்நிலை முறைமையினுள் உள்ளீடு செய்யும் பணிகள் 2025.11.26ம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டது.
2025.12.05ம் திகதியன்று நிகழ்நிலை மூலமாக விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதி என்றாலும், தற்போதுள்ள அனர்த்த நிலைமை காரணமாக குறித்த இறுதித் திகதி 2025.12.12ம் திகதியாக திருத்தம் செய்யப்படுகின்றது என்பதை அறியத் தருகின்றேன்.
மேலும் 2025ம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு 2026ம் ஆண்டில் தரம் 6 இற்கு அனுமதிப்பதற்கான முதலாவது மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் செயற்பாடுகள் தற்போதளவில் ஆரம்பிக்கப்படவில்லை
அது தொடர்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் பொய்யானவை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 2025ம் ஆண்டு தரம் 06 இற்கு முதல் சுற்றில் பாடசாலைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாடசாலைகளுக்கு அனுமதித்த பின்னர் நிலவுகின்ற வெற்றிடங்களுக்காக நிகழ்நிலை முறைமையூடாக மேன்முறையீட்டு விண்ணப்பப் படிவங்கள் கோரப்படும்.

0 Comments