வெள்ளத்தினால் பாதிப்படைந்த மனித நுகர்வுக்கு தகுதியற்ற அரிசியை மோசடியான முறையில் தயார்படுத்தி சந்தைக்கு விநியோகிக்கும் மோசடி நடவடிக்கை குறித்த தகவல்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய கண்டி, ஹாரிஸ்பத்துவ பகுதியில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற 1,000 கிலோ கிராம் அரிசியை விற்பனை செய்யத் தயார் செய்த சந்தேகநபர்கள் சிலருக்கு எதிராக இவ்வாறு சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இந்நாட்களில் தாம் கொள்வனவு செய்யும் அரிசி தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள், பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.
எவ்வாறாயினும், இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால், அப்பிரதேச பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்குமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள், பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

0 Comments