இந்தப் படத்தில் புனிதமான மனதுடையவர்கள் அப்துல்லாவும் அவரது மனைவி கதீஜாவும். அவர்கள் தத்தெடுத்த மகள் ராஜேஸ்வரியின் திருமணம்தான் கோவில் வாசலில் வைத்து நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் இருந்து அப்துல்லாவின் தோட்டத்தில் வேலை செய்ய வந்த சரவணனின் மகள்தான் ராஜேஸ்வரி. ஆனால் அவள் சிறு வயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்துவிட்டாள்.
பெற்றோரை இழந்த அந்த பிஞ்சுக் குழந்தையை அனாதை இல்லத்திற்கு அனுப்ப அப்துல்லாவுக்கும் கதீஜாவுக்கும் மனம் வரவில்லை. தங்களுடைய மூன்று மகன்களுடன், அந்த வீட்டின் ஒரே மகளாக அவளை அவர்கள் வளர்த்தனர்.
தங்களுடைய சொந்த மகளாகவே அவளை வளர்த்தாலும், ராஜேஸ்வரியின் நம்பிக்கையையோ பெயரையோ அவர்கள் மாற்றவில்லை. ஒரு முஸ்லிம் வீட்டில் அவள் இந்துவாகவே வளர்ந்தாள். வீட்டில் அனைவரும் நமாஸ் செய்தபோது, அவள் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்தாள். சகோதரர்கள் பள்ளிவாசலுக்கு சென்றபோது, அவள் கோவிலுக்குச் சென்றாள்.
எந்தவிதமான வேறுபாடுகளும் இன்றி, அந்த அப்பாவும் உம்மாவும் அருகில், தன் நம்பிக்கையோடு அவள் வளர்ந்துவந்தாள்.
ராஜேஸ்வரிக்கு 22 வயதாகியபோது, அவளுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்
அப்துல்லா விஷ்ணுபிரசாத் என்ற இளைஞரைத் தேர்ந்தெடுத்தனர்.
பின்னர் இந்து வழிபாட்டு முறையின்படியே திருமணம் நடத்தப்பட்டது. தங்களும் மகளின் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, காஞ்ஞங்காடு மான்யோட் கோவில்தான் திருமண இடமாக இருந்தது. கோவில் வாசலில் வைத்து, மகளின் கையை விஷ்ணுபிரசாத்தின் கையில் ஒப்படைக்கும் போது, அப்துல்லாவுக்கும் கதீஜாவுக்கும் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
அதை பார்த்திருந்தவர்களின் கண்களும் நனைந்தன. அன்பு செய்ய ஒரு மனம் இருந்தால், வெறுப்பு இல்லாமல் போகும் என்பது உண்மைதான்.
நன்றி - சமூக ஊடகங்கள்

0 Comments