Ticker

6/recent/ticker-posts

தண்ணீர் நிரம்பிய பக்கட்டுக்குள் குழந்தை விழுந்து பலி – கற்பிட்டி, முசல்பிட்டியில் சோகம்

 


கற்பிட்டி, முசல்பிட்டி பகுதியில் இன்றைய தினம் (12) குளியலறை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் நிரம்பிய பக்கட்டுக்குள் விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது.

பெற்றோர்கள் வீட்டில் இருந்த போது குழந்தை விளையாடுவதற்கு குளிக்கும் பகுதிக்கு சென்றுள்ளது அதன் பின்னர் தண்ணீர் நிரம்பிய பக்கட்டுக்குள் முகம் குப்புற தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் கற்பிட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் தற்போது கற்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கற்பிட்டி நிருபர் சப்ராஸ்

Post a Comment

0 Comments