இந்திய எதிர்ப்பு பிரச்சாரம் காரணமாகவே இவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் தெரிவிப்பு.
பங்களாதேஷின் இளம் சமூக செயற்பாட்டாளர் ஷெரீப் ஒஸ்மான் ஹாதியின் கொலை பங்களாதேஷில் இன்னும் ஒரு மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது அதிலும் அது இந்தியாவுக்கு எதிரான போராட்டமாக பரிமாணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு காரணம் இவர் றோ அமைப்பால் கொலை செய்யப்பட்டதாக பங்களாதேஷ் தரப்பினால் பரவலாகக் குற்றச்சாட்டு
முன்வைக்கப்படுகிறது.
அத்துடன் இந்தியாவின் அருணாச்சல அசாம் மேகாலயா மணிப்பூர் திரிபுர மிசோரம் ஆகிய பங்களாதேஷை அண்டிய மாநிலங்கள் பங்களாதேஷ் நாட்டுக்குரியவை என பிரச்சாரம்
செய்து வரும் இவர் இந்த விடயம் சம்பந்தமான பிரச்சாரக் கூட்டத்துக்கு தனது சொகுசு றிக்ஷோவில் சென்று கொண்டு இருக்கையில் மோட்டார் சைக்கிளில் வந்து இருவரால்
சுடப்பட்டு படுகாயம் அடைந்து சிங்கப்பூர் வைத்தியசாலையில் மரணமடைந்தார்.
அத்துடன் படத்தில் உள்ளவர்கள்
இருவரும் தான் ஒஸ்மானை கொலை செய்தார்கள் எனவும் இது
றோவின் நடவடிக்கை எனவும் பங்களாதேஷ் தரப்புகள் பரவலாக குற்றம் சாட்டுகின்றனர்
சமூக செயற்பாட்டாளரான இவர்
தற்போதைய அரசாங்கத்தின் ஒரு முக்கிய புள்ளியாக விளக்குவதுடன்
ஷேக் ஹசினாவை பதவி
கவிழ்ப்பதற்கு தீவிரமாக செயல்பட்டவர் ஆவார்.
அத்துடன் அண்மைக்கால
அரசியல் புரட்சி புரட்சியின்
ஒரு முக்கிய செயற்பாட்டாளர் இவர் ஆவார்.





0 Comments