Ticker

6/recent/ticker-posts

சிறுவன் சடலமாக மீட்பு


யாழ்ப்பாணத்தில் கடலட்டைப் பண்ணைக்குக் காவலுக்குச் சென்ற சிறுவன் ஒருவர் நேற்று (22) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் (வயது 17) என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குருநகர் பகுதியில் கடலட்டைப் பண்ணைக் காவல் பணிக்காக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு சென்ற சிறுவன் காலையில் கரை திரும்பாத நிலையில் காணாமல்போயிருந்தார்.

சிறுவனைத் தேடி அந்தப் பகுதி மக்கள் தேடுதலை மேற்கொண்டனர். இதன்போது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments