திருமண விருந்துபசாரத்துக்கு இரண்டு ஆடுகள் மற்றும் நான்கு கோழிகளைத் திருடினர் என்றக் குற்றச்சாட்டில் ஐந்து சந்தேக நபர்கள், திங்கட்கிழமை (17) ஆம் திகதி அன்று கொஸ்லந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கொஸ்லந்த, மாகல்தெனிய, தியகல பஹல பிரிவில் வசிக்கும் ஒரு இளைஞனின் திருமண விருந்துபசாரத்துக்கு பக்கத்து வீட்டுப் பெண்ணின் இரண்டு ஆடுகள் மற்றும் நான்கு கோழிகளைத் திருடிய ஐந்து சந்தேக நபர்கள் அந்தப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேக நபரின் திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது, அதற்காக அவரது நண்பர்கள் இந்தத் திருட்டை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக நபர்களின் விசாரணையின் போது திருடப்பட்ட கோழிகளின் இறைச்சியை சமைத்து சாப்பிட்டதாகவும், இரண்டு ஆடுகளின் இறைச்சி குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களையும் வழக்குப் பொருட்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கொஸ்லந்தா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒசந்த சிந்தக சுபாசிங்கவின் தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்துள்ளது.
சுமனசிறி குணதிலக
.jpg)
0 Comments