Ticker

6/recent/ticker-posts

வரவு - செலவுத் திட்டம் 2026 (நேரலை)

 


2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் இன்று(07) முற்பகல் 1.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவு - செலவுத் திட்டம் தொடர்பான தகவல்களுக்கு இந்த பக்கத்துடன் இணைந்திருங்கள்.

04:01 PM

மாத்தறை நில்வலா உப்புத் தடையின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆயிரம் மில்லியன் ரூபாய் 

04:01 PM

வெள்ள அச்சுறுத்தலுக்கு குறுகிய கால தீர்வுகளைக் கண்டறிய ரூ. 250 மில்லியன். வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு ரூ. 500 மில்லியன்.

04:00 PM

நீர்ப்பாசனத் துறையை மேம்படுத்த 91,700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

03:59 PM

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீன் இருப்பிடங்களைக் கண்டறியும் திட்டத்திற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:58 PM

மீனவர்களுக்கு உயிர்காக்கும் உபகரணங்களை வழங்க 100 மில்லியன் ரூபாய்.

03:57 PM

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்த 350 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

03:57 PM

மீன்பிடி துறைமுகங்களை புதுப்பிப்பதற்காக ரூ. 300 மில்லியன்.

03:56 PM

ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னை நில உரிமையாளர்களை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ. 2500 மில்லியன் ஒதுக்கீடு.

03:51 PM

ஊடகவியலாளர்களுக்கு வீடு
 
சீன உதவியுடன் கட்டப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு வீடு வழங்குவதற்கு நடவக்கை எடுக்கப்படும்.

03:50 PM

வடக்கில்,  தென்னை முக்கோண நடவடிக்கைகளுக்கு 600 மில்லியன் ரூபாய்.

03:49 PM

மில்கோ படல்கம தொழிற்சாலையை புதுப்பிக்க 3000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

03:48 PM

கால்நடை மற்றும் பன்றி இனப்பெருக்க திட்டத்திற்கு ஆயிரம் மில்லியன் ரூபாய்.

03:48 PM

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

03:47 PM

2030 ஆம் ஆண்டுக்குள் உள்ளூர் பால் தேவைகளில் 75 சதவீதத்தை பூர்த்தி செய்வதை இலக்காகக் கொண்ட ஒரு தேசிய திட்டம்.

03:47 PM

தம்புள்ளை குளிர்பதன கிடங்கில் சூரிய மின் பெனல்கள் அமைப்பை நிறுவ 250 மில்லியன் ரூபாய்.

03:46 PM

பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பயிர்களுக்கான சேமிப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கீடு.

03:45 PM

விளையாட்டு துறையை மேம்படுத்த 800 மில்லியன் ரூபாய்.

03:44 PM

சீன உதவியுடன் நிர்மானிக்கப்படும் வீட்டுத் திட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம்.  
 

03:43 PM

ஊடகவியலாளர்களின் திறன்களை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாய்கள்.

03:42 PM

நாடகம், நடன நிகழ்த்து கலைகள் மற்றும் இலக்கிய மேம்பாட்டிற்காக 50 மில்லியன் ரூபாய்.

03:40 PM

யானைகளின் நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்காக 80 மில்லியன் ரூபாய்.

03:39 PM

வனவிலங்குத் துறைக்கு ஐயாயிரம் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் நிரந்தரமாக நியமிக்கப்பட உள்ளனர்.

03:38 PM

மின்சார வேலிகள் அமைப்பதற்காக  300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

03:38 PM

வனவிலங்குத் துறையின் செயல்திறனை அதிகரிக்க அத்தியாவசிய வாகனங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

03:37 PM

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்.

03:36 PM

பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக  200 மில்லியன் ரூபாய்  ஒதுக்கீடு.

03:33 PM

 தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1350  ரூபாயில் இருந்து 1750 ரூபாயாக அதிகரிக்கப்பட்டள்ளது. அதில், வருகைக்கான கொடுப்பனவு  200 ரூபாய் அரசாங்கத்தால்  2026 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும்.  

அத்துடன், தோட்ட நிர்வாகத்தால் வருகைக்கான கொடுப்பனவு 200 ரூபாய் வழங்கப்படுகின்றது. 

ஆக, 1350+200+200= 1750 ரூபாயாகும். 

பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்க

03:31 PM

சமூக மேம்பாட்டு மன்றங்களை நிறுவுவதன் மூலம் கிராம மேம்பாட்டுக்காக 20750 மில்லியன் ரூபாய்.

03:29 PM

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பரவலாக்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கு பத்து மில்லியன் ரூபாய்.

03:28 PM

தம்புள்ளை மற்றும் தெனியாய பிராந்திய மருத்துவமனைகளின் புனரமைப்புக்காக ஆயிரம் மில்லியன் ரூபாய்.

03:28 PM

குறைந்த வருமானம் கொண்ட தலசீமியா நோயாளிகளுக்கு மாதாந்திர பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை.

03:25 PM

எண்பத்தி இரண்டு  அடிப்படை மருத்துவமனைகளை ஐந்து ஆண்டுகளுக்குள் மேம்படுத்துவதற்காக 31,000 மில்லியன் ரூபாய்.

03:24 PM

ஆரம்ப சுகாதார நிலையங்களை நிறுவுவதற்கு 1500 மில்லியன் ரூபாய்.

03:23 PM

ஐந்து ஆண்டுகளுக்குள் மருத்துவமனைகள் நவீனமயமாக்கப்படும்.

03:23 PM

நாடு முழுவதும் மருத்துவமனை அமைப்பை சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்  .

03:22 PM

நாடு முழுவதும் தொழிற்பயிற்சி மையங்களை மேம்படுத்த எட்டாயிரம் மில்லியன் ஒதுக்கீடு.

03:21 PM

மாற்றுத்திறனாளி குழந்தைகளை கல்விக்காக ஐந்தாயிரம் ரூபாய் மானியம்.

03:20 PM

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து உயர்கல்வி பயிலும்  மாணவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை.

03:19 PM

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிக்கப்படும். அதன்படி, மகாபொல கொடுப்பனவு பத்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும். அத்துடன் புலமைப்பரிசில் கொடுப்பனவு 9000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

03:18 PM

மருத்துவ பீடங்களின் மேம்பாட்டுக்காக பதினொன்றாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கிடு.

03:17 PM

ஆட்டிசம் உள்ளிட்ட குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு 500 மில்லியன் ரூபாய்.

03:17 PM

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து கல்வி கற்க வாய்ப்பு வழங்கப்படும்

03:16 PM

அரச சேவைக்காக 3% பேர் மாற்றுத்திறனாளி சமூகத்தில் இருந்து எடுக்கப்படும் 

03:14 PM

களீன் ​ஸ்ரீ லங்கா திட்டத்திற்கு 6500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

03:14 PM

தூய்மை இலங்கை திட்டத்திற்கு 6500 மில்லியன் ரூபாய்.

03:13 PM

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பிரச்சாரத்திற்காக   2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

03:12 PM

ஒரு அறியாத குழந்தையின் பாடசாலை பையைக் கூட போதைப்பொருள்,  ஆக்கிரமித்து வருகிறது.

03:11 PM

அனைத்து துறையிலும் தூய்மையான நாட்டை உருவாக்கும் இலக்கை நனவாக்குதல்.

03:10 PM

இணைய  புராட்பேண்ட் வவுச்சர்கள்
 
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கான இணைய புராட்பேண்ட் வவுச்சர்கள்
  
பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

03:10 PM

ஆராய்ச்சி வணிகமயமாக்கலுக்கான அரசாங்க நிதி உதவி

03:09 PM

குறைந்த வருமானம் கொண்ட (அஸ்வெசும) குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இணைய பிரோட்பேண்ட் மற்றும் வவுச்சர்கள்

03:08 PM

டிஜிட்டல் தொடர்பு கோபுரங்களுக்கு ஐந்து ஆண்டு வரிச் சலுகைகள்

03:07 PM

AI தரவு மையங்களை நிறுவுவதற்கான சலுகைகள்

03:06 PM

QR குறியீடுகளைப் பயன்படுத்தி ரூ. 5,000 க்குக் குறைவான பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும்.

03:05 PM

நாம் சில தியாகங்களைச் செய்து, நாட்டிற்கு தொழில்நுட்பத்தைக் கொண்டு வர வேண்டும். அதை நோக்கி நாங்கள் பாடுபடுகிறோம்.

03:04 PM

ஆன்லைன் கட்டணங்களின் போது செலுத்தப்படும்  சேவைக் கட்டணங்கள் நிறுத்தப்படும்.

03:04 PM

பணமில்லா சமூகத்தை உருவாக்குவோம்
 
 
பணமில்லா சமூகத்தை மேம்படுத்துவதற்காக அனைத்து அரசு கொடுப்பனவுகளையும் ஆன்லைனில் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
 
பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

03:02 PM

பிரஜை தரவு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

03:00 PM

முதல் டிஜிட்டல் அடையாள அட்டை  2026 மார்ச் இல் வழங்கப்படும்.

02:59 PM

டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் பொருளாதார கவுன்சில் நிறுவப்படும்.

02:59 PM

ஹப்புத்தளை பிரதான சுற்றுலா கிராமத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  
பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

02:58 PM

அரசு நிறுவனங்கள் பணம் செலுத்துவதை நெறிப்படுத்துவதற்காக கவ் பே (gov Pay) நெறிப்படுத்தப்படும். 

02:57 PM

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான  திட்டம் அடுத்த ஆண்டில் ஆரம்பிக்கப்படும்.

02:56 PM

உள்நாட்டு விமான நிலையங்களின் மேம்பாட்டுக்காக ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

02:55 PM

சுற்றுலாத் துறையில் திறமையான நிபுணர்களை உருவாக்க ரூ. 500 மில்லியன் ஒதுக்கீடு.

02:55 PM

பேரே வாவியை அபிவிருத்தி செய்வதற்கும் அதை கொழும்பில் ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் அதற்காக ரூ. 2,500 மில்லியன் 

02:53 PM

சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு கடன் வழங்குவதற்காக ரூ. 5,900 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

02:53 PM

நீர் தொடர்பான சுற்றுலாத் தொழில்களை மேம்படுத்துவதற்கு 3500 மில்லியன் ரூபாய்.

02:52 PM

அரசு விடுதிகள் சுற்றுலா விடுதிகளால் கைவிடப்பட்டுள்ளன. நிறுவன ஊழியர்களின் சலுகைகளைப் பாதுகாக்கும் வகையில் அவை உற்பத்தித் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும்.

02:50 PM

ஹப்புத்தளையை ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

02:50 PM

கலப்பு கடன் வசதிகளுக்காக ரூ. 80,000 மில்லியன்

02:46 PM

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க 5900 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

02:45 PM

விவசாயக் கடன்களை வழங்க 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

02:44 PM

தொழில்துறை மேம்பாட்டிற்கு மேலும் ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

02:44 PM

பிணையம் இல்லாமல் தொழில்முனைவோருக்கு கடன் வழங்குவதாக கூறிய வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக மேலும் ஏழாயிரம் மில்லியன் ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு.

02:43 PM

சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை மதிப்பாய்வு செய்வதற்கான ஒரு புதிய முறை

02:42 PM

தேசிய ஒற்றை வர்த்தக சாளரத்தை நிறுவ ரூ. 2500 மில்லியன் ஒதுக்கீடு.

02:41 PM

தேசிய வளர்ச்சித் திட்டத்தை வலுப்படுத்த கூடுதலாக ரூ. 250 மில்லியன் ஒதுக்கீடு.

02:38 PM

நிலத் தகவல்களைக் கொண்ட மத்திய டிஜிட்டல் அமைப்புக்காக நூறு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

02:38 PM

முதலீடுகளைக் கொண்டுவரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான குடியிருப்பு விசா முறை .

02:38 PM

சுற்றுலாப் பயணிகளுக்கு வதிவிட விசா முறை அறிமுகப்படுத்தப்படும்.

02:37 PM

முதலீட்டு வலயங்கள் தொடர்பான சேவைகளின் மேம்பாட்டிற்காக ஆயிரம் மில்லியன் ரூபாய்.

02:36 PM

குருநாகல் மற்றும் காலியில் இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை இப்போது கைவிடப்பட்டுள்ளதுடன்  அவற்றின் கடன்கள் அடைக்கப்பட்டு, தனியார் துறை முதலீட்டிற்காக அவை திறக்கப்படும்.

02:35 PM

முதலீட்டுச் சபையின் கீழ் திகன மற்றும் நுவரெலியாவில் இரண்டு தகவல் தொழில்நுட்ப மண்டலங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

02:35 PM

மூலோபாய அபிவிருத்தி மற்றும் துறைமுக நகர அபிவிருத்திச் சட்டம் அடுத்த ஆண்டு திருத்தப்படும்.

02:34 PM

முதலீடுகளுக்குத் தேவையான சட்டப் பாதுகாப்பை வழங்குதல்

02:33 PM

முதலீடுகளுக்குத் தேவையான சட்டப் பாதுகாப்பை வழங்குதல்

02:33 PM

பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஆதரிப்பதற்காக பொருளாதார மற்றும் சமூக உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கு பொது-தனியார் கூட்டாண்மை  

02:31 PM

முதலீட்டுக்கு உகந்த சமூகத்தை உருவாக்குதல்

02:30 PM

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 5.2% ஆகக் குறைக்கப்படும்.

02:29 PM

நேரடி வரி மற்றும் மறைமுக வரி விகிதங்களை 60-40 சதவீத விகிதத்திற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

02:28 PM

அரச வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதமாகக் கொண்டுவருவதே எங்கள் இலக்கு.

02:28 PM

அனைத்து துறைகளிலும் நேர்மறையான பொருளாதார குறிகாட்டிகள் தென்படுகின்றன.

02:26 PM

கடந்த ஆண்டை விட அரச வருவாய் ரூ.900 பில்லியனாக அதிகரித்துள்ளது.

02:24 PM

தொழிலின்மை 4.5% லிருந்து 3.8% ஆகக் குறைந்துள்ளது.

02:23 PM

பொது முதலீட்டை நான்கு சதவீதமாக அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

02:23 PM

2026 ஆம் ஆண்டுக்குள் அ​ரசாங்க வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.3 சதவீதமாகக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

02:21 PM

விசேட கவனிப்பு தேவைப்படுபவர்களைத், தொடர்ந்து கவனித்துக்கொள்வதற்காக ஒரு வலுவான சமூகப் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

02:20 PM

கிராமப்புற வறுமையைப் போக்க ஒரு வளர்ச்சியடைந்த கிராமத்தை உருவாக்குதல்.

02:19 PM

2025 ஆம் ஆண்டில் இறக்குமதிச் செலவு 430 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

02:19 PM

இந்த ஆண்டில் அமெரிக்க டாலர் 1373 மில்லியன்  மதிப்புள்ள வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

02:18 PM

எந்தப் பொருளாதார இலக்குகளையும் ​நாங்கள் கைவிட மாட்டோம்.

02:17 PM

இந்த ஆண்டில் இதுவரை, வாகன இறக்குமதிக்காக 1,133 மில்லியன்  அமெரிக்க டாலர் பெறுமதியுடைய கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.

02:16 PM

2028 இல் இருப்பதும் நாங்கள். அந்தக் கடனை செலுத்தும் நாங்கள்.   

02:15 PM

இந்த ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதிக்குள்  வாகன இறக்குமதிக்காக 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை செலவிட்டுள்ளது.

02:14 PM

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் வெளிநாட்டுக் கடன் சேவை 760 மில்லியன் அமெரிக்க டாலர்களால் அதிகரித்துள்ளது.

02:12 PM

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் கடனில் பெரும் பகுதியை ஏற்கனவே செலுத்திவிட்டோம்.

02:11 PM

நமது கடன் விகிதம் ஏற்கனவே 95 சதவீத இலக்கை நெருங்கி வருகிறது, எனவே கடன் செலுத்துதல் குறித்து யாரும் பயப்பட வேண்டாம்.

02:11 PM

புதிய கட்டணக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்காக ஒரு தேசிய வர்த்தக சாளரம்.

02:11 PM

2025 ஆம் ஆண்டில் இறக்குமதிச் செலவு 430 மில்லியன் அமெரிக்க டாலர்களால் அதிகரிக்கும்

02:09 PM

ஏற்றுமதி வருவாய் மாதத்திற்கு 2 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது.

02:09 PM

சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை நடத்த ஒரு நிபுணர் குழுவை நாங்கள் நியமித்துள்ளோம்.

02:09 PM

அரசாங்க வணிக வியாபார சட்டம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படும்  

02:08 PM

சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை நடத்த ஒரு நிபுணர் குழுவை நாங்கள் நியமித்துள்ளோம்.

02:06 PM

​முதல் வரவு - செலவுத் திட்டத்தில் போடப்பட்ட அடித்தளம் இரண்டாவது வரவு - செலவுத் திட்டத்தில் மேலும் பலப்படுத்தப்படும்.

 

02:06 PM

7 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைவதை இலக்காகக் கொண்டு அரசாங்கம் செயல்படுகிறது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்

02:05 PM

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இலங்கை 823 மில்லியன் அமெரிக்க டொலரை வெளிநாட்டு நேரடி முதலீட்டில் (FDI) அடைந்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

02:03 PM

பொதுமக்களுக்கு எதிராக மோசடி மற்றும் ஊழல் குற்றம் நடந்திருந்தால், நிச்சயம் தண்டிக்கப்படும்.

02:02 PM

நீதித்துறை சேவைக்கான நெறிமுறைகளை வரைவதற்கு ஒரு நிபுணர் குழுவை நியமிக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். 2026 ஆம் ஆண்டில் ஒரு டிஜிட்டல் சொத்து முறையும் அறிமுகப்படுத்தப்படும்.

02:02 PM

அரசாங்கம் விரைவில் மின்னணு கொள்முதல் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

02:02 PM

அரசாங்கம் விரைவில் மின்னணு கொள்முதல் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

01:59 PM

2026 ஆம் ஆண்டில் பணமோசடி தடுப்பு கட்டமைப்பு வலுப்படுத்தப்படும்.

01:59 PM

நிதி அமைச்சகத்தின் இணையதளத்தில் வரிச் சலுகைகள் வெளியிடப்படுகின்றன, இதனால் வெளிப்படைத்தன்மை ஏற்படுகிறது.

01:59 PM

 
சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் போது என்னை ஹிட்லர் என்றனர்.
  
பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

01:59 PM

அரச சொத்து மேலாண்மைச் சட்டம் 2026 ஆம் ஆண்டு திருத்தப்படும்.

01:58 PM

தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறிய அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க தேசிய கணக்காய்வு சட்டம் திருத்தப்பட்டது.

01:57 PM

நீதித்துறை அதிகாரிகளுக்கான நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

01:56 PM

சொத்துக்கள் மற்றும் சம்பாதித்த செல்வத்தை அறிவிப்பதற்கான அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

01:55 PM

நீதித்துறை அதிகாரிகளுக்கான நெறிமுறைகளை உருவாக்குதல்.

01:55 PM

டிஜிட்டல் சொத்து அறிவிப்பு முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

01:54 PM

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.

01:54 PM

சொத்துக்கள் மற்றும் சம்பாதித்த செல்வத்தை அறிவிப்பதற்கான அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

01:54 PM

தேர்தல் கூட்டத்திற்கு நீங்கள் வரவில்லை என்றால், வளத்தை துண்டித்த வரலாறு இருந்தது. அந்த நிலைமை முடிவுக்கு வரும்.

01:53 PM

பொது நிதிக்கு டிஜிட்டல் அணுகுமுறையை அறிமுகப்படுத்துதல்

01:53 PM

டிசம்பர் மாதத்திற்கு முன்னர் ஏர் லங்காவின் கடன் மறுசீரமைக்கப்படும்.

01:52 PM

அரசு ஊழியர்களின் சம்பளம் மூன்று கட்டங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

01:52 PM

பணவீக்கம் நேர்மறையான நிலைகளை எட்டியுள்ளது.

01:52 PM

பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் உண்மையான தேவையில் இருப்பவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

01:48 PM

உண்மையாக பொருளாதார கஷ்டத்தில் இருக்கும், பொருளாதார நிவாரணங்ளை பெற்றுக்கொள்ளவேண்டிய குடும்பங்களை இனங்கண்டு, அஸ்வசும திட்டம் 2026 ஆம் ஆண்டு மறுசீரமைக்கப்படும் 

01:37 PM

பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்க நிதியமைச்சரான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சபைக்கு வருகைதந்தார்.

01:33 PM

பாராளுமன்றம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்தின தலைமையில் கூடியது 

01:28 PM

பட்ஜெட் காலத்தில், பொது விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, சனிக்கிழமைகள் உட்பட ஒவ்வொரு நாளும் பட்ஜெட் விவாதம் நடைபெறும். அதேபோல், குழுநிலை விவாத காலத்தில், பாராளுமன்றம் திங்கட்கிழமைகளில் காலை 9.30 மணிக்கும், மற்ற எல்லா நாட்களிலும் காலை 9.00 மணிக்கும் கூடும்.

01:27 PM

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 5 வரை 3 சனிக்கிழமைகள் உட்பட 17 நாட்களுக்கு நடைபெற உள்ளது. அதன் பிறகு, ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.

01:27 PM

2025 செப்டெம்பர் 26ஆம் திகதி முதல் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் 14ஆம் திகதி வரை 06 நாட்களுக்கு நடைபெற உள்ளது. அதன் பின்னர், வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு நவம்பர் 14ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.

01:26 PM

வரவு -செலவுத் திட்டம் (பட்ஜெட்)  மீதான முழுமையான விவாதம்  8ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறும்.

01:26 PM

 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் மீதான (வரவு செலவுத் திட்ட உரை) இரண்டாம் வாசிப்பு வெள்ளிக்கிழமை (07) பிற்பகல் 1.30 மணியளவில் நிதிக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் பாராளுமன்றத்தில் இடம்பெறும்.

01:23 PM

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் மீதான (வரவு செலவுத் திட்ட உரை) இரண்டாம் வாசிப்பு வெள்ளிக்கிழமை (07) பிற்பகல் 1.30 மணியளவில் நிதிக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் பாராளுமன்றத்தில் இடம்பெறும்

12:15 PM

2026 ஆம் ஆண்டுக்கான  வரவு - செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.


Post a Comment

0 Comments