Ticker

6/recent/ticker-posts

Video அருகம்பை பிரதேசத்தில் யூத ஆதிக்கம் ! இலங்கை வந்துள்ள சுற்றுலா பயணி விசனம் !!




அருகம்பை பகுதிக்கு வருகைத்தரும் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள கலாச்சார மாற்றங்கள் குறித்து அங்கு சென்றுள்ள சுற்றுலாப் பயணி ஒருவர் சமூக ஊடகங்களில் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

குறித்த வெளிநாட்டு நபர் ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவில், “அருகம்பே இலங்கையில் இருப்பதாக நான் நினைத்தேன், ஆனால் இது இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் போன்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அருகம் விரிகுடா பகுதியில் உள்ள உணவகங்களில் ஹீப்ரு மொழியைப் பயன்படுத்துவதற்கும்,அவர்களின் பண்டிகைகளை நடத்துவதற்கும் இஸ்ரேலியர்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கும் சுற்றுலாப் பயணியான டிஜே டாம் மோனகல் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

அவரது காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது, மேலும் இந்த சூழ்நிலையில் உள்ளூர் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்


Post a Comment

0 Comments