Ticker

6/recent/ticker-posts

கொழும்பில் ஒரே நாளில் விரைவாக பாஸ்போட் (கடவுச் சீட்டு ) எடுப்பதற்கு👏

 


🙏கொழும்பில் ஒரே நாளில் விரைவாக பாஸ்போட் (கடவுச் சீட்டு ) எடுப்பதற்கு👏 

🙏படியுங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்🙏 


கொழும்பு, பத்திரமுல்லவில் ஒரே நாளில் பாஸ்போட் பெறுவதற்கான ரோக்கன் காலை ஆறு மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரையும் நாளாந்தம் தற்போது வழங்கப்படுகின்றது. 


தேவையானவை. 

01. ஆங்கில மொழியில் கப்பிட்டல் எழுத்தில் நிரப்பப்பட்ட படிவம். தெளிவான எழுத்தில். 


02. தெளிவான தேசிய அடையாள அட்டை. 

அதன் போட்டோ பிரதி. 


03.அண்மைய மூன்று மாத காலத்தில் குடிவரவுத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரூடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படம். 


நெற்றியில் விபூதி, சந்தனம் போன்ற சமய அடையாளங்கள் இருக்கக் கூடாது.

பெண்கள் பொட்டு வைக்கலாம். 


04. காலாவதியான பாஸ்போட் இருந்தால் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

பாஸ்போட் எத்தகைய நிலையில் தொலைந்தாலும் அதன் பொலிஸ் அறிக்கை கட்டாயமாகத் தேவை.


05. பிறப்புச் சான்றிதழின் தெளிவான பிரதி. ஆங்கில மொழி பெயர்ப்பு, ஆறு மாத காலத்தினுள் எடுக்கப்பட்ட பிரதி ஆகிய தேவைகள் ஏதுமில்லை .


கிழியாத, அழியாத சான்றிதழாக இருந்தால் போதுமானது. 


அது போலவே திருமணமான பெண்களின் பெயர் மாற்றத்திற்கான திரமணப் பதிவுச் சான்றிதழும் இருந்தால் போதுமானது. 


06. ஒரே நாள் பாஸ்போட்டுக்கான கட்டணம் ரூபா 20 000/-

சாதாரண சேவை 10 000/-


பாஸ்போட் தொலைத்தால் செல்லுபடியான பாஸ்போட் ஆயின் செல்லுபடியான காலத்திற்கு ஏற்ப தண்டப்பணம் செலுத்துதல் வேண்டும். 


07. வயது 16 க்குக் கீழ்ப்பட்ட பிள்ளைகள் பாஸ்போட் பெற தாய், தந்தையர் இருவருடைய சம்மதக் கடிதம் கட்டாயமானது.


பெற்றோரில் ஒருவர் வெளிநாட்டில் வசித்தால் அங்குள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக கடிதம் அனுப்புதல் கட்டாயமானது. 


08, வயது 16 ஐ அடைந்த பிள்ளை க.பொ. த.சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்காகக் கொடுக்கப்பட்ட கணனிப் பதிவுத் தேசிய அடையாள அட்டைச் சான்றிதழ் போதுமானது. மூலப் பிரதி தேவை. 


09.அரச, தனியார், கூட்டுறவுத் துறை உத்தியோகத்தர்கள் தங்களுடைய பதவிப் பெயரை இடுவதாயின் நிறுவனக் கடிதத் தலைப்பில் முழுமையான விபரங்களுடன் ஆங்கில மொழியில் கடிதம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 


10. பாஸ்போட் எடுத்த பின்பாக பெயர் மாற்றம்,பதவி மாற்றம், பெயரிலுள்ள எழுத்து மாற்றம் இருந்தால் உரிய ஆவணம் தேவையாயின் 50/- முத்திரை ஒட்டிய சமாதான நீதிவான் சத்தியக் கடதாசி சமர்ப்பிக்கப்பட வேண்டும். 


இதற்கு 1500/- கட்டணம் செலுத்த வேண்டும். 


11. கொழும்பு பாஸ்போட் அலுவலகத்தில் பதிவாளர் நாயக அலுவலகத்தின் அலுவலகம் உள்ளது. பிறப்பு, விவாக, இறப்புச் சான்றிதழ் தேவையாயின் அரைமணி நேரம் வரிசையில் நின்று 120 ரூபா பிரதி ஒன்றுக்குக் கட்டணம் செலுத்திப் பெறலாம் .


உங்களுடைய மூலப் பிரதி தெளிவானதாக இல்லாவிட்டால் பதிவு நிகழ்ந்த பிரதேச செயலகத்தில் பெற்றுச் செல்வது அலைச்சலைத் தராது. 


வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் பாஸ்போட் பெறுதல் தொடர்பானது. 


01.உங்களுடைய நாட்டில் தூதரகம் இருந்தால் இல்லாவிடில் அயலில் தூதரகம் உள்ள நாட்டில் விண்ணப்பிக்க வேண்டும். 


02. ஆவணங்கள் வழமை போலானவை .

பாஸ்போட் கட்டணம் நீங்கள் வசிக்கும் நாட்டின் நாணயத்தில் கட்டுவது கட்டாயமானது. 

மஞ்சள் நிறமுடைய பணம் பெறும் பற்றுச் சீட்டு மூலமாகச் செலுத்துங்கள். 

அதனை மிகவும் கவனமாக வைத்திருக்க வேண்டும். 


அதில் உள்ள தொடர்பு இலக்கம் மிக முக்கியமானது. 


நாடுகளைக் குறிக்கும் ஆங்கிலச் சுருக்கப் பெயர் தொடர்பு இயக்கத்தின் ஆரம்பத்தில் இருக்கும் .


உதாரணங்கள். 

கனடா - CAN , பிரித்தானியா - GBR ,

பெல்ஜியம்-BEL , ஜேர்மனி - GER/ BER


03.உங்களுடைய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு ஆறு மாத காலத்தின் பின்பாகத் தான் உங்களுடைய விண்ணப்பம் சரியானதா அல்லது ஏதும் ஆவணங்கள் தேவையா என்பதை அறிய முடியும். 


இதற்காக கொழும்பு, பத்திரமுல்லவிலுள்ள குடிவரவு அலுவலகத்துக்கு அனுப்ப முடியும். 


இதற்கான அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியைத் தாங்கள் நியமிக்க முடியும். 


இதற்கான கடிதம் உங்களுடைய நாட்டுத் தூதரகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், கைத்தொலைபேசி இலக்கம் குறித்து அனுப்புதல் வேண்டும். 


தூதரகம் அதனை இலங்கைக்கு அனுப்பிய பின் உங்களுக்குத் தரும் பிரதியை நேரடியாக எடுத்துச் செல்ல வேண்டும். 


அப்போது தான் பாஸ்போட் விண்ணப்பம் எந்த நிலையிலுள்ளது என விபரம் தருவார்கள் .


இதனை வைத்தே பாஸ்போட்டை வேகமாக உங்களுடைய நாட்டில் கூரியர் சேவை மூலமாக பெற முடியும். 


04.உங்களுடைய பாஸ்போட் வெளிநாட்டில் தொலைத்தால் பொலிஸ் றிப்போட் அங்கு பெற்று இணைக்க வேண்டும் .


அதே போல பாஸ்போட் காலாவதியாகிய பின் சில மாதங்களோ, சில வருடங்களோ கழித்து விண்ணப்பித்தால் அதற்கான ஒரு காரணத்தைக் குறிப்பிட்டு அங்குள்ள சமாதான நீதிவான் சான்றுப்படுத்திய கடிதம் விண்ணப்பத்துடன் இணைத்தல் கட்டாயமானது. 


05. நீங்கள் விண்ணப்பித்த பாஸ்போட் வரத் தாமதமாயின் வெளிநாட்டிலிருந்து வந்து போகக் கூடிய ஒருவராயின் அவசர காலப் பாஸ்போட்டை எடுத்து வாருங்கள் .


இங்கு கொழும்பு வந்து உங்களுடைய ஆவணங்களின் பிரதியைக் கொடுத்தால் நான்கு மணி நேரத்தில் பாஸ்போட் தருவார்கள் .


தற்செயலாக உங்களுடைய பாஸ்போட் உங்களுடைய நாட்டுத் தூதரகத்துக்குப் போனால் படிவமொன்றை நிரப்பிக் கொடுத்தால் இரண்டு வாரத்தில் திருப்பி எடுத்துத் தருவார்கள். 


06. தரகர்களுக்கு இலட்சங்களை இலஞ்சமாகக் கொடுத்து ஊழல் வலையமைப்பை வளர்க்காதீர்கள். 


🙏நன்றி🙏

வேதநாயகம் தபேந்திரன்

Post a Comment

0 Comments