Ticker

6/recent/ticker-posts

Video ஈரானுக்குள் மொஸ்ஸாட்! அதிர்சி வீடியோ



ஈரானுக்குள் மொஸ்ஸாட்!

ஈரானிய மண்ணில் அதன் செயல்பாட்டாளர்களைக் காட்டும் ஒரு வீடியோவை மொசாட் வெளியிட்டுள்ளது.

இது ஈரானிய வான் பாதுகாப்பு (Defense System) அமைப்புகளை அழிக்க வடிவமைக்கப்பட்ட துல்லியமான தாக்குதல் திட்டத்தை காண்பிக்கிறது.

#மொசாட் பல மாதங்களுக்கு முன்பே ஈரானுக்கு ஏவுகணைகளை கடத்தத் தொடங்கியது.

ஒரு திடீர் தாக்குதலுக்கு தயாராகும் வகையில் மொசாட் ஈரானிய மண்ணின் #ஆழத்தில் வெடிக்கும் ட்ரோன்களின் கொத்துக்களை #ரகசியமாக புதைத்துள்ளது.

இந்த காணொளியை பகிரங்கப்படுத்துவதன் மூலம் #மொஸ்ஸாட் உலக நாடுகளுக்கு சொல்ல வரும் விடயம் யாதெனில் “எந்தவொரு நாட்டுக்குள்ளும் ஊடுருவும் திறன் எம்மிடம் இருக்கிறது” என்பதாகும்.

ஏவுகணைகளை, போர்விமான குண்டு வீச்சுக்களை தடுக்கும் #டிபென்ஸ் சிஷ்டத்தை செயலிழக்க செய்துவிட்டால் பயமின்றி மிக இலகுவாக தாக்குதல்களை தொடர முடியுமென மொஸ்ஸாட் திட்டமிட்டது.


இதற்கென ஈரானுக்குள்ளேயே #மொஸ்ஸாட் ஏஜெண்டுகள் உருவாக்கப்பட்டிருந்தனர்.

அதன் மூலம்தான் ஈரானின் முக்கிய தலைவர்கள் எங்கு எத்தனை மணிக்கு வருகிறார்கள், செல்கிறார்கள் இரவில் எங்கு தங்கியிருக்கின்றார்கள் போன்ற அத்தனை தகவல்களும் துல்லியமாக பெறப்பட்டிருந்தது.

இஸ்ரேல் இன்று காலை மேற்கொண்ட முதலாவது தாக்குதலின் மூலம் ஈரானின் #டிபென்ஸ் சிஷ்ட்டத்தை பரிசோதித்தது.

மொஸ்ஸாட் ஏற்கனவே திட்டமிட்டபடி அது செயலிழந்திருப்பதை அவதானித்த இஸ்ரேல் மூன்று, நான்கு சுற்றுக்களில் ஈரானின் பல்வேறு நிலைகள் மீதும் தாக்குதல் தொடுத்தது.

இறுதியாக செயலிழக்க செய்த டிபென்ஸ் சிஷ்டங்கள் மீதும் குண்டு போட்டு அழித்தது.

இறுதியாக நண்பகலில் ஐந்தாம் சுற்று தாக்குதலை மேற்கொண்டு #அணுவாலைகள் மற்றும் #எயார்பேஸ் என்பவற்றின் மீதும் குண்டு வீசி அழித்தது.

மேற்படி தாக்குதல்கள் அனைத்திலும் கொல்லப்பட்ட ஈரானின் தலைவர்களை விடவும், கட்டளையிடும் ஒருமித்த ராணுவ #வலைப்பின்னலை திக்குமுக்காட செய்ததுவே மொஸ்ஸாட்டிற்கு கிடைத்தை பெரிய வெற்றியாகும்.

இப்போது அடிபணிந்து வருமாறு ஈரானிடம் அமெரிக்க அதிபர் எச்சரிக்கையாக வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் மிக #சப்தமின்றி இருக்கும் #ஈரான் அடுத்து என்ன செய்யும் என்பதை பார்ப்போம்.

இதேவேளை எதிரியின் மீது #பழிவாங்குமாறு கூறி ஆயிரக்கணக்கான மக்கள் ஈரானின் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். (வீடியோ அடுத்த பதிவில்)

முழு உலகமும் ஈரானில் வைத்திருந்த நம்பிக்கை உயிர்த்தெழுமா அல்லது இலவுகாத்த கிளியாக #ஈராக்கின் வரலாறு போன்று ஆகிவிடுமா என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.




Post a Comment

0 Comments