Ticker

6/recent/ticker-posts

ஈரான் இஸ்ரேலிடம் தோற்றுவிட்டால், ஈரான் அழிக்கப்பட்டு விடுமா?


 ஈரான் இஸ்ரேலிடம் தோற்றுவிட்டால், ஈரான் அழிக்கப்பட்டு விடுமா? உலகம் அழிந்து விடுமா? இஸ்ரேல் உலக #வல்லரசாகிடுமா? முன்னறிவிப்புக்கள், எதிர்வுகூறல்கள் எல்லாம் பொய்யாகி விடுமா? 

👇👇👇


👉வெறுமனே சுமார் 360 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட, பெரும்பாலும் தட்டையான, வெறும் #வெட்டவெளியான கரையோர #சின்னஞ்சிறிய #காஸாவில்..


கிட்டத்தட்ட #இரண்டு வருடங்களாக அப்பாவி பொதுமக்களையும், கட்டடங்களையும் கொன்று குவித்து #தரைமட்டமாக்கிய பின்னாலும் இன்னும் உள்ளே #நுழைய முடியாமல் #திக்குமுக்காடி தவிக்கும் இஸ்ரேல்…


👉 இரண்டு வருடத்தை எட்டும் நிலையிலும் இதுவரைக்கும் காஸா மண்ணில் #ஹமாஸ் ஒழித்து வைத்துள்ள #பிணைக்கைதிகளை மீட்க முடியாது #மல்லுக்கட்டும் இஸ்ரேல்…


👉 விமானம் விமானமாக சென்று கொத்து கொத்தாக குண்டு போட்டும், #யெமன் ராணுவத்தை இதுவரைக்கும் #கட்டுப்படுத்த முடியாமல் #கதறும் இஸ்ரேல்…


👉 இஸ்ரேலை விடவும் சுமார் 75 #மடங்கு விசாலமான (1,648,195 சதுர கிலோமீட்டர்) மிக #பிரமாண்ட நிலப்பரப்புடன்…


#மலைத்தொடர்கள், #பாலைவனங்கள், #கடல்சமவெளிகள், ஆறுகள், நதிகள், கற்பாறைகள், கரடுமுகடுக என  ஏகப்பட்ட இயற்கை வளங்களுடன், எதிரணியை #திணறடிக்க செய்யக்கூடிய #யுத்த மூலோபாயமும், தந்திரமும் கொண்ட ஈரானை...


👉சுமார் 40 வருடங்களுக்கு மேலாகவே எதிரியை முறியடிக்கும் அனைத்து திட்டமிடல்களையும், தயாரிப்புக்களையும், ஆயுத வளங்களையும் கொண்டுள்ள ஈரானை…


👉 அவளவு இலகுவாக ஊடுருவி #பிடித்துவிடலாம் #அழித்துவிடலாம் என்று நினைப்பது அவளவு இலகுவான காரியம் #கிடையாது. ஈரானிடம் நவீன #போர்விமானங்கள்தான் #இல்லை. மாறாக இருந்த #இடத்திலிருந்தே உலகின் எந்தவொரு நாட்டிற்கும் #ஏவும் பலம், தொழிநுட்பம் இருக்கிறது.


👉ஈராக்கிய அதிபர் சதாம் ஹுஸைன் வாழ்ந்த காலம் வேறு, Ai தொழினுட்பம் கொண்ட இந்த காலம் வேறு.


👉ஒரு கதைக்கு வேண்டுமானால் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப்படைகள் #தெஹ்ரானில் குவிக்கப்பட்டாலும், நீண்ட நாள் அங்கு நின்று பிடிக்க முடியாதென்பதே யாதார்த்தமாகும்.


👉ஈரான் கடன்படாத ஒரு நாடு, சொந்த பொருளாதார வளத்தில் வளர்ந்து வரும் நாடு!


👉ஆனால் #அமெரிக்காவும், #இஸ்ரேலும் முழு உலக நாடுகளிடமும் #கடன்பெற்று காலம் கடத்தி வரும் நாடுகள்.


👉இந்த யுத்தம் இன்னும் இன்னும் பல வருடங்கள் அமெரிக்காவையும், இஸ்ரேலையும் பின்னோக்கி தள்ளிச் செல்லுமே தவிர ஒரு போதும் முன்னோக்கி கொண்டு செல்லாது என்பதே யதார்த்தமாகும்.


👉இறுதியில் எங்கேனும் ஒரு அரபு நாடுதான் #ட்றில்லியன் கொடுத்து காப்பாற்றும்.


👉அதனால், அதோ போர்க்கப்பல் வருகிறது, இதோ போர் விமானங்கள் வருகிறது, ஈரான் கதை முடிகிறது, மத்தியகிழக்கு மடிகிறது என்றெல்லாம் அலட்டிக்கொள்ளவே அவசியம் இல்லை. 


👉ஈரானையும், ஏனைய நாடுகளையும் விரட்டி அடிபணிய செய்வதற்கே இத்தனை எடுப்பும், ஆரவாரமும்.


👉 வர்த்தகப்போரில் ஒரு மாதத்திற்கு மேலாகவே சீனாவுடன் நின்றுபிடிக்க முடியாது வலுவிழந்த வல்லரசு ஈரானுக்கு எதிராக எதுவரை செல்லும் என்பதை பார்ப்போம்.


“நீங்கள் உங்களுக்குள் திட்டமிடும் போது, உங்களுக்கெல்லாம் மேலே ஒருவன் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறான், அதுதான் நடக்கிறது, இதுவே யதார்த்தம்,நியதி”


17.06.2025

Almashoora Latest News

Post a Comment

0 Comments