Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலிய ராணுவம் சென்ற கவச வாகனம் வெடிகுண்டு தாக்குதலால் 14 பேர் கவச வாகனத்தினுள் கொல்லப்பட்டனர்.

 


தெற்கு காசா பகுதியில் நேற்று நடந்த சண்டையின் போது, ​​இஸ்ரேலிய ராணுவம் சென்ற கவச வாகனம் வெடிகுண்டு தாக்குதலால் 14 பேர் கவச வாகனத்தினுள் கொல்லப்பட்டனர்.


கொல்லப்பட்டவர்களில் 6 பேரின் பெயர்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது:


கஃபர் யோனாவைச் சேர்ந்த லெப்டினன்ட் மதன் ஷாய் யாஷினோவ்ஸ்கி, 21.


ரெஹோவோட்டைச் சேர்ந்த ஸ்டாஃப் சார்ஜென்ட் ரோனல் பென்-மோஷே, 20.


எல்யாகின் பகுதியைச் சேர்ந்த ஸ்டாஃப் சார்ஜென்ட் நிவ் ராடியா, 20.


மஸ்கெரெட் பாட்யாவைச் சேர்ந்த ஸ்டாஃப் சார்ஜென்ட் ரோனன் ஷாபிரோ, 19.


அஷ்கெலோனைச் சேர்ந்த 21.


எஷ்ஹாரைச் சேர்ந்த சார்ஜென்ட் ஷாஹர் மனோவ், 20.


சார்ஜென்ட் மாயன் பருச் பேர்ல்ஸ்டீன், 20.


ஏனையோரின் பெயர் வரும் மணிநேரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அவர்கள் அனைவரும் 605வது காம்பாட் #இன்ஜினியரிங் பட்டாலியனில் பணியாற்றினர்.


கான் யூனிஸில் இஸ்ரேலிய டாங்கி  பயணித்துக் கொண்டிருந்தபோது, ​#ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடாத்தினர்.


இந்த குண்டுவெடிப்பில் CEV தீப்பிடித்தது, அதை அணைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன. உள்ளே இருந்த அனைவரும்  தீயில் கருகி இறந்தனர். 


CEV இன் எரிந்த சடலங்கள் காசாவிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்பட்டது.


Post a Comment

0 Comments