Ticker

6/recent/ticker-posts

இதற்கு தீர்வு காண்பது யார்...?

 


இதற்கு தீர்வு காண்பது யார்...?

கல்முனைக் கல்வி மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபல பெண்கள் பாடசாலையில் கற்கும் மாணவிகள் பாடசாலையிலிருந்து வீடு செல்லும் சந்தர்ப்பத்தில் பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து செய்வதற்கு இடைஞ்சல் ஏற்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


இப்பாடசாலையில் இருந்து தமது பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு வருகை தரும் பெற்றார்கள் பாடசாலை நேரம் முடிவடைந்து நெரிசலில் இருந்து இவ்வீதியால் பிள்ளையுடன் வீடு சென்றடைவதற்கு 30 நிமிடங்களுக்கு மேல் கால தாமதம் ஏற்படுவதாகவும் பெற்றோர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.


இக்கல்லூரியில் நான்கு இடங்களில் வெளியேறும் வாசல்கள் இருந்தும் பிரதான வாசல் மூலமாகவே மாணவிகள் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது.


இதனால், மாணவிகளை அழைத்துச் செல்ல வரும் வாகனங்கள் பாடசாலையின் பிரதான வாசலை அண்மித்து நிறுத்தப்படுவதும் முன் வாசல் முன் சிலர் வாகனத்தை நிறுத்தி மாணவிகளை ஏற்றுவதும்  வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து செய்வதற்கு தடையாக உள்ளது.


இப்பாடசாலை அமைந்துள்ள வீதியில் மாணவிகள் வீடு செல்லும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு ஏற்படும் வாகன நெரிசலைக் குறைத்து பாதையைச் சீராக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது யார்..?


பாடசாலை நிர்வாகமா....?

பெற்றோர்களா.........?

பொது மக்களா....?

போக்குவரத்து பொலிஸாரா?


இவ்வாறு பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

*இந்த குழுமத்தில் இணைந்து 🤝உண்மைதன்மையான விரைவான 💨செய்திகளை 🗞️பெற்றுக்கொள்வதற்கு*🔗


Post a Comment

0 Comments